Skip to main content
UNHCR வைத்திருப்பவர்கள், அமலாக்க நடவடிக்கைகளிலிருந்து விலக்கா ?

 

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் அட்டையை வைத்திருப்பவர்கள், சட்ட அமலாக்க நடவடிக்கைகளிலிருந்து விலக்கு பெற்றவர்கள் அல்ல !

அந்த அட்டை வைத்திருப்பவர்கள், அவர்களது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, குடிநுழைவு ஆவணங்கள் தொடர்பான குற்றங்கள் மட்டுமே இருந்தால், அவர்கள் பொதுவாக தடுத்து வைக்கப்படமாட்டார்கள்.

எனினும், வேறு எந்த மலேசியச் சட்டத்தையும் மீறினால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என, குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

----------

Negeri Sembilan Seremban-னில், இடைநிலைப்பள்ளியின் நான்காவது மாடியில் இருந்து, 4-ஆம் படிவ மாணவி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது !

மரணத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, அத்துறை பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றது.

---------

இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தின் தனியுரிமையை மதித்து நடந்துகொள்ளும்படி, கல்வி அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது !

இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகளை வழங்க, அமைச்சு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

---------

பஹாங் குவாந்தானில், 3 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில், மூவர் கொல்லப்பட்டதில், மருத்துவர் ஒருவரும், அவருடைய இரண்டு வயது பிள்ளையும், அடங்குவர் !

---------

Johor Bahru-வில் உள்ள உணவகமொன்றில், எரிபொருள் மற்றும் சிவப்பு சாயத்தை ஊற்றிவிட்டு தீ வைத்ததாகக் கூறப்படும், முகமூடி அணிந்த இரு நபர்களை, காவல்துறை வலைவீசி தேடி வருகிறது !

RAAGA Aaha Siranta Isai!