Skip to main content
ஊட்டச்சத்துச் சட்டத் திட்டம் தயாரிப்பு !

 

ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உடல் பருமன் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஊட்டச்சத்து தொடர்பான புதிய சட்டத் திட்டத்தை, சுகாதார அமைச்சு தயாரித்து வருகிறது !

அத்திட்டத்தில், குழந்தைகளின் ஊட்டச்சத்தைப் பாதுகாப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளின் விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவது ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம்பெறும் என, அமைச்சு கூறியது.

கல்வி மற்றும் பராமரிப்பு நிறுவனங்களில், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுக்க ஏதுவான சூழலையும் உருவாக்குவது, அதில் கவனம் செலுத்தப்படும் என அவ்வமைச்சு குறிப்பிட்டது.

இதனிடையே, ஆசியான் நாடுகளில் உடல் பருமன் விகிதத்தில் புருணையைத் தொடர்ந்து, மலேசியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

----------

சிலாங்கூரில் உள்ள பள்ளிகளின் நுழைவாயில்களில், முக அடையாளம் காணும் தொழில்நுட்பக் கருவிகளைப் பொருத்துவது குறித்து, மாநில அரசாங்கம் பரிசீலித்து வருகிறது !

பள்ளிகளில் குற்றச் செயல்களைத் தடுக்கவும், அனுமதியில்லாத நபர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்கவும், அது துணைபுரியும் என, மாநில மந்திரி பெசார் தெரிவித்துள்ளார்.

---------

இதனிடையே, சரவாக் பள்ளியொன்றில், கோடரியால் ஆசிரியர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் பள்ளி மாணவன் மீது, ஆயுதம் வைத்திருந்தது, காயம் ஏற்படுத்தியது, வெடிபொருட்களை வைத்திருந்தது ஆகிய 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன !

அந்த 16 வயது மாணவரை, மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்தும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

---------

வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில், நிவாரணப் பணிகளுக்கு, தேசிய சேவைப் பயிற்சியாளர்களின் உதவியைப் பெறுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது !

---------

பினாங்கு Tanjung Bungah கடற்பகுதியில், நேற்று கடற்காற்றுப் படகில் சென்றபோது காணாமல் போன, 74 வயதான மருத்துவர், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, தீயணைப்பு மீட்புக் குழு தெரிவித்துள்ளது !

RAAGA Aaha Siranta Isai!