Skip to main content
உயர்வு மடானி: நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

 

 

உயர்வு மடானி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகையில் இன்னும் 21.9 மில்லியன் ரிங்கிட் எஞ்சியுள்ளது!

 

எனவே முதல் கட்ட விநியோகத்தின் கீழ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட வணிகர்கள், அடுத்தடுத்த கட்டங்களுக்கு தாராலமாக விண்ணப்பிக்கலாம் என, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

"ஆனால் உங்கள் விண்ணப்பம் பூர்த்தியாகியிருக்க வேண்டும், அதுவே முக்கியம், தேவையான ஆவணங்கள் இருக்க வேண்டும். நிராகரிக்கப்பட்டுவிட்டால், என்னென்ன ஆவணங்கள் தேவை என கேட்டு, இரண்டாம் முறை நீங்கள் விண்ணப்பிக்கலாம்" என்றார் அவர்.

 

இந்திய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக, இந்திய உருமாற்றுப் பிரிவு மித்ராவின் கீழ் வணிக மேம்பாட்டிற்காக அரசாங்கம் வழங்கும் உதவித் தொகையே உயர்வு மடானியாகும். 

 

உயர்வு மடானி, Tuisyen மடானி, தர்மா மடானி என மூன்று திட்டங்களின் கீழ், தகுதிப் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, அமைச்சர் ரமணனின் தலைமையில் நேற்று தலைநகரில் 67 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான உதவித் தொகைகளுக்கான மிதிரி காசோலைகள் வழங்கப்பட்டன. 

 

------

 

சரவாக் Jalan Kejatauவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ இரண்டாவது நாளாகத் தொடரும் நிலையில், நேற்று வரை 80 எக்கர் பரப்பளவுக்குத் தீ பரவியிருக்கிறது!

 

நேற்றிரவு மணி 7.30 வரை அதில் பாதி நிலப்பரப்பில் தீ அணைக்கப்பட்டுவிட்டது.

 

எஞ்சிய இடத்தில் தீயை அணைக்கும் பணிகள் இன்று தொடரும் என, தீயணைப்பு மீட்புத் துறை தெரிவித்தது.

 

இதனிடையே ஆகக் கடைசி தகவல்படி, KLலின் Cherasசிலும், சரவாக்கின் Miri, Bintulu, Sibu, Seri Aman என மொத்தம் 11 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் இருக்கிறது.

 

-------

 

இதனிடையே சரவாக்கில் காற்றின் தரத்தைக் காட்டும் API குறியீடு 100ரைக் கடந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வெளிநடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

மாணவர்கள் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக, அந்த உடனடி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

 

------

 

மற்றொரு பக்கம் இந்தோனேசியாவில் தீவிரம் அடைந்து வரும் காட்டுத் தீ ஒரு லட்சத்து ஏழாயிரம் ஏக்கர் பரப்பளவுக்குப் பரவியிருப்பதை அடுத்து, மேற்கு Kalimantanநில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

 

ஒன்பது நாட்களுக்கும் மேல் ஆகியிருக்கும் நிலையில், தீயை அணைக்கும் தீயணைப்பு படையின் முயற்சி தொடர்கிறது.

 

------ 

 

கொலும்பியாவில் பதிந்துக் கொண்டுள்ள மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது!

 

நேற்று அங்கு ரிக்டர் அளவையில் 7.4ஆகப் பதிவாகிய நில்நடுக்கத்தில் குறைந்தது 250 பேர் பலியானதாகத் தகவல் கிடைத்துள்ள நிலையில், மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என, Wisma Putra கூறியது.

 

RAAGA Aaha Siranta Isai!