
உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதை, மனிதவள அமைச்சு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது !
அந்த முயற்சிக்கு ஏற்ப, அரசாங்கத்தின் குறைந்தபட்ச ஊதியக் கொள்கைக்கு உட்பட்ட தொழிலாளர்களுக்கு, அடுத்தாண்டு ஜூன் முதல் மாதாந்திர குறைந்தபட்ச சம்பளம் ஈராயிரம் ரிங்கிட்டாக உயர்த்தப்படவுள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பு, முதலாளிகள் MyFutureJobs இணையத் தளம் மூலம், உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் வழி, வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருக்கும் நிலையைப், படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் அவ்வமைச்சு கூறியது.
---------
Roblox உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகள் மீது கூடுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது குறித்து, மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் ஆராய்ந்து வருகிறது !
அது தொடர்பில், MCMC மற்றும் மலேசிய தொடர்பு, பல்லூடக உள்ளடக்க மன்றம் இணைந்து, ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
குழந்தைகள் உள்ளிட்ட பயனர்களின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், அந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
---------
Spain-னில் நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தில், மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது !
அதில், மலேசியர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதிப்படுத்த உதவிய அந்நாட்டு அதிகாரிகளுக்கும், அந்நாட்டின் மலேசியத் தூதரகத்துடன் இணங்கி செயல்பட்டதற்கும், அமைச்சு நன்றி தெரிவித்துக்கொண்டது.
புதன்கிழமை, கணினிக் கோளாறு காரணமாக, ரயில்களின் பாதுகாப்பு அமைப்பு செயலிழந்ததைத் தொடர்ந்து, 2 பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்டதில், சுமார் 70 பேர் உயிரிழந்தனர்.
--------
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள, பஹாங் தீயணைப்பு, மீட்புத் துறை தயார் நிலையில் உள்ளது !
வெள்ள மீட்பு மற்றும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்காக, 4,870 வீரர்களும் 55 படகுகளும், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
--------
இதனிடையே, Negeri Sembilan-னில் வெள்ளத்தால் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ள வேளை, கெடாவில் 28 பேரும், பேராக்கில், 23 பேரும், வெள்ள நிவாரண மையங்களில், தஞ்சம் புகுந்துள்ளனர் !
---------
Astro, தனது 30-வது ஆண்டு நிறைவையொட்டி, ஒன்றிணைந்து கொண்டாடுவோம் எனும் கருப்பொருளில், தீபாவளிக்காக 75 மணி நேர சிறப்புப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குகிறது !
உள்ளூர் தயாரிப்புகள், புதிய திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன், Sony Vizhha அலைவரிசை 220 எனும், புதிய தமிழ் பொழுதுபோக்கு அலைவரிசையையும் Astro அறிமுகப்படுத்தியுள்ளது.
ராகா மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும், தீபாவளிக்கான சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடவடிக்கைகளையும் Astro வழங்குகிறது.
இன்று, Bukit Jalil தேசிய அரங்கு, கார் நிறுத்துமிடம் B-யில், 2026 தீபாவளி கார்னிவல் நடைபெறும் வேளை, நாளை, Brickfields கலாமண்டபத்தில் ECR Indian Shopping Carnival நடைபெறுகிறது.
தொலைகாட்சியில் நேலையாகக் ஒளிபரப்பப்படும் அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ள, Astro அன்போடு அழைக்கின்றது.