Skip to main content
வெளிநாட்டு ஊழியர் தேவை ஆராயப்படும்!

 

 

வெளிநாட்டுத் தொழிலாளர்களை கோரும் நிறுவனங்கள் விண்ணப்பங்கள் சில முக்கிய அம்சங்களின் அடிப்படையில் ஆராயப்படும் என மனிதவள அமைச்சு கூறியிருக்கிறது!

 

வணிகத் தளம், நிதி அறிக்கைகள், ஊழியர் சேம நிதி பங்களிப்பு ஆகியவை அதிலடங்கும்.

 

உண்மையிலேயே தேவைப்படும் முதலாளிகளுக்கு மட்டும் வெளிநாட்டு தொழிலாளர்களை வழங்குவதை உறுதிப்படுத்த, துல்லியமான ஆய்வுக்குப் பிறகே விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படும் என அவ்வமைச்சு கூறியது.

 

------- 

 

இதனிடையே ஆகக் கடைசி தகவல்படி நாட்டில் ஈராயிரத்து ஐநூருக்கும் மேற்பட்டோர் நான்கு மாநிலங்களின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

 

மிக அதிகமாக சிலாங்கூரில் ஆயிரத்து முன்னூரு பேரும், பேராவில், ஆயிரத்து நூரு பேரும், எஞ்சிய நூருக்கும் மேற்பட்டோர் நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்காவிலும் உள்ளனர்.

 

--------

மலேசியாவில் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ பயணத்தை நிறைவுச் செய்து சொந்த ஊர் திரும்பியுள்ளார் France அதிபர் Emannuel Macron. 

------- 

 

தலைநகர்  Chow Kitடில், பெண்கள் மற்றும் முதியோரைக் குறி வைத்து கொள்ளையடித்து வந்ததாக நம்பப்படும் நபர் இன்று காலை போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டார்!

 

இதற்கு முன் பதிவாகியிருந்த ஏறக்குறைய 24 கொள்ளைச் சம்பவங்களுடன் அவ்வாடவருக்குத் தொடர்பிருப்பதாக காவல் துறை சந்தேகிக்கிறது. 

 

------- 

 

தலைமை செயல்முறை அதிகாரி பொருப்புக்குத் திரும்பும் Jensen Huangகின் கோரிக்கையை நிராகரித்துள்ளது பிரபல தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனமான என்விடியா!

 

இதையடுத்து தொழில்நுட்பத் துறையினரின் அழுத்தம் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவு இருந்தபோதிலும் அந்நிறுவனம் அவ்வாறு முடிவெடுத்திருப்பது Jenseng மீண்டும் அப்பதவிக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளன. 

 

RAAGA Aaha Siranta Isai!