Skip to main content
வேப் பொருட்கள் ; பெரும் அச்சுறுத்தலாகியுள்ளது !

 

வேப் பொருட்களின் வேகமான வளர்ச்சியும், அவை, சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் கருவிகளாக தவறாகப் பயன்படுத்தப்படுவதும், பொது சுகாதாரத்திற்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன !

தேசிய நச்சு மையம் அவ்வாறு எச்சரித்துள்ளது.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், வேப்பின் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையளிப்பதாக, அம்மையம் கூறியது.

கடந்த சில ஆண்டுகளில் வேப் பொருட்கள் வேகமாக மாற்றமடைந்து வந்துள்ளதால், நச்சுத்தன்மை சம்பவங்கள் அல்லது அவை தவறாக பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில், அவற்றைக் கண்காணிப்பதும், கட்டுப்படுத்துவதும், நிர்வகிப்பதும், மேலும் சவாலாக மாறி வருவதாக, அது சொன்னது.

----------

இனிப்புக் கலந்த கெட்டிப்பால், அதிக சீனி கொண்ட இதர பால் சார்ந்த பொருட்களுக்கு, படிநிலை அடிப்படையிலான கலால் வரியை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் !

சுகாதார நிபுணர் அவ்வாறு பரிந்துரைத்துள்ளார்.

நீரிழிவு நோய் மற்றும் மற்ற தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் விரிவான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இது அமையும் என அவர் கூறினார்.

இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாய், நீரிழிவு நோய் மற்றும் மற்ற தொற்றா நோய்களைத் தடுக்கும் திட்டங்களுக்கு, ஒதுக்கப்பட வேண்டும் என அவர் சொன்னார்.

---------

மேலும் சில செய்திகள் சுறுக்கமாக ;

நாட்டின் சமூக பாதுகாப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்த, அரசாங்கம் உறுதியாக உள்ளது !

அது அனைவரையும் உள்ளடக்கும் வகையில், நீடித்த மற்றும் இன்றைய தொழிலாளர் சந்தையில் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப செயல்படக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பதே, அதன் நோக்கமாகும் என, மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

----------

அண்மையில் மலையேறிகள் காணாமல் போகும் சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து, மலையேற்ற நடவடிக்கைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், மலை வழிகாட்டிகளுக்கான சிறப்பு வழிகாட்டி நெறிமுறை, உருவாக்கப்பட்டு வருவதாக, மலேசிய வனத்துறை மலை வழிகாட்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது !

----------

பஹாங் Bentong-கில், அரசியல்வாதி ஒருவர், பல்கலைக்கழக மாணவரை அறைந்ததாகக் கூறும் சம்பவம் தொடர்பில், காவல்துறை 9 பேரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளது !

--------

ஜொகூர் தம்போயில், வார இறுதியில், அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியின் 12-ஆவது மாடியில் இருந்து விழுந்ததாகக் கூறப்படும் 10 வயது சிறுவனுக்கு, இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது !

RAAGA Aaha Siranta Isai!