Skip to main content
வெப்ப காலம் ; Bomba தயார் !

 

Super El Niño பருவத்தை எதிர்கொள்ள, தீயணைப்புத் துறை தயாராகி வருகிறது !

அப்பருவத்தின் போது ஏற்படும் காட்டுத் தீயை எதிர்கொள்ளும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த ஏதுவாக, அத்துறை தனது செயல்பாட்டு உபகரணங்களை அதிகரித்து வருகிறது.

நீடிக்கும் வறண்ட வானிலையை எதிர்கொள்ளும் வகையில், கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர இலகுரக வாகனங்களை இணைத்து, அத்துறை செயல்பாட்டு வாகனங்களை அதிகரித்தரிக்கின்றது.

இதுவரை 80 தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 40 வாகனங்கள் இம்மாத இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் Bomba கூறியது.

அதே வேளை, வறண்ட காலத்தில், தீ வேகமாகப் பரவி, கட்டுப்படுத்த சிரமம் ஏற்படும் என்பதால், பொதுமக்கள் திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளும்படி அது கேட்டுக்கொண்டது.

Super El Niño பருவம், அடுத்தாண்டு தொடக்கத்தில், மலேசியாவை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

---------

பினாங்கில், காவல்துறை விசாரணையில் உள்ள இணைய வழி பாலியல் தொல்லை சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவிக்கு, பாதுகாப்பு வழங்கப்படும் என்பதை, மாநில கல்வித் துறை உறுதியளித்துள்ளது !

இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ, அத்துறை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.

அச்சம்பவம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய, உள் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முன்னதாக, தனது 17 வயது மகளை தொடர்ச்சியாக இணைய வழி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும் நபர்கள் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, 46 வயது தாய் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

----------

ஜொகூரில், அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், உடனே நிரப்பப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கை, அரசியல் நோக்கம் கொண்டதல்ல !

மாறாக, மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை உறுதி செய்ய மட்டுமே, அக்கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

---------

சிலாங்கூர் கிள்ளானில், Rocky எனும் நாய் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்த விசாரணை அறிக்கைகள், அரச தரப்பு துணை தலைமை வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன !

எனவே, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக, அதன் அறிவிறுத்தலுக்காக காத்திருப்பதாக, மாநில கால்நடை சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

--------

மலாக்கா ஆற்றில், தவறி விழுந்ததாகக் கூறப்படும் முதியோர் ஒருவர், உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, Bomba தெரிவித்துள்ளது !  

RAAGA Aaha Siranta Isai!