Skip to main content
வெப்பம் ; சுற்றுச்சூழல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் !

 

 

தற்போது நாட்டில் நிலவும் வெப்பம், ஆங்காங்கே சுற்றுச்சூழல் பிரச்சனைகளைக் கொண்டு வரும் !


மலேசிய வானிலை ஆய்வு மைய செயல்பாட்டுக் குழுவின் துணை தலைமை இயக்குநர், AMBUN DINDANG அதனை தெரிவித்துள்ளார்.

அண்மையில் சில இடங்களில் காடுத் தீச்சம்பவங்கள் நிகழ்ந்ததையும் அவர் மேற்கோள்காட்டினார்.

தற்போதைக்கு, திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளும்படியும், அவர் நினைவூட்டினார்.

காரணம், சிறிய தீ கூட, பெரிய தீ விபத்துக்கு வழிகோலும் என அவர் எச்சரித்தார்.

--------

மலேசியாவில் ஆய்வு செய்யப்பட்ட 3.6 லட்சம் தீயணைப்பு நீர்க்குழாய்களில், சுமார் 50-ஆயிரம், செயலிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளன !

அது, அவசரநிலையில் தீயணைப்பு நடவடிக்கைகள் தாமதமாகும் அபாயத்தை ஏற்படுத்துவதாக, தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

----------

சிலாங்கூர் கிள்ளானில், மது போதையில் மோட்டார்சைக்கிளோட்டியை அடித்துத் தூக்கிய காரோட்டுநர், மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனயை எதிர்நோக்கலாம் !

அவர் மீது இன்று, கொலை குற்றச்சாட்டு சும்மத்தப்பட்டது ; அவர் போதைப்பொருள் உண்ட குற்றச்சாட்டையும் எதிர்கொண்டார்.

--------

வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை, பினாங்கு அரசு ஊழியர்களுக்கு பொருத்தமில்லை ; அதற்கு அவசரத் தேவையும் இல்லையென மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார் !

---------

இன்று முதல், மக்கள் மாதாந்திர சாரா உதவித் தொகையை பெறுகின்றனர் ; 2 லட்சம் புதிய பெறுனர்களின் MyKad அட்டைகளிலும், அவ்வுதவதவித் தொகை போடப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது ! 

RAAGA Aaha Siranta Isai!