
முன்னாள் பிரதமர் DS Najib Tun Razakகின் வீட்டுக் காவல் இன்று தொடங்குகிறது!
SRC International வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை தலைநகர் Langgak Dutaஇல் அமைந்துள்ள அவரது வசிப்பிடத்தில் கழிக்க, KL உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.
தனது சிறைவாசத்தின் எஞ்சிய காலத்தை வீட்டில் கழிக்க நிபந்தனையாக விதிக்கப்பட்டிருந்த ஐம்பது மில்லியன் ரிங்கிட்டை, நஜீப் செலுத்தியதைத் தொடர்ந்து அவருக்கு அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நஜீப் ஆகஸ்டு 2028 வரை வீட்டுக் காவலில் இருப்பார்.
-----
மலாக்கா மாநில தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பு எதிர்ப்பார்த்த இலக்கை அடைந்துவிட்டது!
தேர்தல் ஆணைய தலைவர் Datuk Seri Ramlan Harun குறிப்பிட்டிருந்த இலக்குக்கு ஏற்ப, 95 விழுக்காட்டினர் இன்று வாக்களித்துவிட்டனர்.
காலை எட்டு மணி தொடங்கி 12 யிரத்து ஐநூருக்கும் மேற்பட்ட காவல் துறை மற்றும் ராணுவப் படை உறுப்பினர்களும் அவர்களது துணைகளும் இன்றைய முன்கூட்டியே வாக்களிப்பில் வாக்களித்தனர்.
மலாக்காவில் மாநில தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.
-----
இதனிடையே தேர்தல் ஆணையத்தின் இணையத்தள பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன!
இணைய தாக்குதலுக்கு அவ்வகப்பக்கம் உண்டானதாகக் கூறப்படுவதை அடுத்து அவ்வாறு விளக்கிய Ramlan Harun, அதன் தொடர்பிலான அறிக்கை ஒன்று விரைவில் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டார்.
-----
அமைச்சரவை மாற்றம் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை பிரதமர் DSAI திட்டவட்டமாக மறுத்துள்ளார்!
இப்போதைக்கு அதற்கு எந்த அவசியம் இல்லை என்றும், அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
-----
ஜொகூர் பாருவில் இரண்டு கோடியே 84 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் காவல் துறை எழுவரைக் கைது செய்துள்ளது.
நகைக்கடை ஒன்றில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்ததாக கடந்த வெள்ளிக்கிழமை காவல் துறை புகாரைப் பெற்றது.
-----
உலகின் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனமான Nvidia, பிரபலம் வாய்ந்த தனது தலைமை செயல்முறை அதிகாரி Jensen Huang மீது, சுயேட்சை விசாரணையைத் தொடக்கியுள்ளது.
வெளிநாட்டு அரசாங்கத்தின் உளவாளியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் ஒரு தொழிலதிபருடன், தமக்குத் தொடர்பு இருந்ததை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.