Skip to main content
விஜய் ஆட்சியமைக்க மும்முரம் !

 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அரசாங்கத்தை அமைக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார் !

ஆட்சியமைக்க உரிமைக் கோரி தமிழக ஆளுநருக்கு அவர் கடிதம் அனுப்பியிருக்கின்றார்.

தமது தலைமையில் புதிய ஆட்சி அமைந்ததும், இரண்டே வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் எனவும் அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.  

234 சட்டமன்றத் தொகுதிகளில், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை என்றாலும், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக TVK உருவெடுத்துள்ளது.  

சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அவர் கூட்டணி ஆட்சியை அமை,ப்பார் என எதிர்பார்க்கப்படும் வேளை, தமிழக ஆளுநரின் அழைப்புக்காக அவரும் அவரின் கட்சியினரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

------------
 
விசாக தினம் மே 31-ஆம் தேதி, பேரரசரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் ஜூன் 1-ஆம் தேதி ஆகியவற்றை முன்னிட்டு, பொது விடுமுறையை வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது ! 
 
தீபகற்ப மலேசியா, லாபுவான் கூட்டரசு பிரதேசத்தில் உள்ள தனியார் துறை முதலாளிகள், தங்கள் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய, ஐந்து கட்டாய பொது விடுமுறை நாட்களில், மாமன்னரின் பிறந்தநாளும் ஒன்றாகும் என மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

விசாக தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால், அதற்கான மாற்று விடுமுறையாக செவ்வாய்க்கிழமை வழங்குமாறு, அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

------------ 
 
நாட்டின் நுழைவாயில்களில் செயல்படுத்தபடவுள்ள, தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு அமைப்பு, செப்டம்பர் மாதம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் நிலையில், பயணிகளைச் சோதிக்கும் பணிகள், 4 முதல் ஐந்தே விநாடிக்குள் முடிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது !

மேலும் திறமையானதாகக் கருதப்படும் அவ்வமைப்பு, நாட்டின் எல்லை கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக, உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

-----------

இவ்வாண்டு நாடு முழுவதும், முப்பதாயிரம் இடங்களில் Jualan Rahmah Madani திட்டத்தை விரிவுப்படுத்தி செயல்படுத்த, அரசாங்கம் முடிவெடுத்துள்ளது !

மக்கள் தங்கள் அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் பெற உதவும் நோக்கில், அம்முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

RAAGA Aaha Siranta Isai!