
நாட்டின் மூன்று விமான நிலையங்களில் கண்டறியப்பட்ட போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளில், சுமார் 97 விழுக்காடு, கஞ்சா போதைப்பொருள் என தெரியவந்துள்ளது !
இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை, கோலாலம்பூர், பினாங்கு, ஈப்போ விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், 1.8 டன்னுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, Malaysia Airports Holdings Berhad தெரிவித்துள்ளது.
மொத்தம் 63 கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
---------
இதனிடையே, சுபாங் ஆகாயப்படை தளத்தின் வருகைப் பகுதியில், 96.2 கிலோ கிராம் மெத்தம்பெட்டமின் போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், 3 அரச மலேசிய ஆகாயப்ப்டை அதிகாரிகள் உட்பட அறுவர் மீது, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது !
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை அல்லது குறைந்தது 15 பிரம்படிகளுடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
----------
பகாங்கின் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, நவம்பர் 30-ஆம் தேதி, மாநில சுல்தானுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாக, Mentri Besar தெரிவித்துள்ளார் !
அங்கு வெள்ள அபாயமுள்ள 572 இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்ற வேளை, வெள்ளப் பேரிடரை எதிர்கொளளும் வகையில், ஒரே நேரத்தில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 870 பேர் தங்க வசதியாக, 878 தற்காலிக துயர்துடைப்பு மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறினார்.
--------
கைபேசிப் பயனர்கள் தங்கள் அவசரகால எச்சரிக்கைகளை முடுக்கி வைக்குமாறும், தங்கள் கைபேசி மென்பொருளைச் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பித்துள்ளதை உறுதி செய்யுமாறும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் நினைவூட்டுகிறது !
தேசிய முன் எச்சரிக்கை அமைப்பு அல்லது MySiren வழங்கும் அறிவிப்புகளை பெறுவதற்கு இது உதவும்... இந்த அமைப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை காலை நாடு தழுவிய சோதனையை நடத்த உள்ளது.
----------
Astro Ulagam ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இளம் செய்தி வாசிப்பாளர் தேடலின் இரண்டாம் கட்டத்திற்கு 25 பங்கேற்பாளர்கள் தேர்வாகியுள்ளனர் !
இம்மாதம் 30ஆம் தேதி வரை தங்களுக்கு விருப்பமான பங்கேற்பாளருக்குப் பொதுமக்கள் வாக்களிக்கலாம்.
வாக்களிப்போர் ஒவ்வொருவருக்கும் நாளுக்கு ஐம்பது வாக்குகள் வரை செலுத்த அனுமதி உண்டு.
வாக்களிப்புத் தளம் உள்ளிட்ட மேல் விவரங்களுக்கு Astro உலகம் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.