
இந்தோனேசிய விமான நிலையத்தில், போதைப்பொருளுடன் கைதான மலேசிய விமானி, அந்த போதைப்பொருளை, சிலாங்கூர் அம்பாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டிலிருந்து பெற்றார் !
விமானப் பயணத்திற்கு இரு நாட்களுக்கு முன்பே, அவர் போதைப்பொருளைப் பெற்றிருந்தது, விசாரணையில் தெரியவந்துள்ளதாக, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மலேசியாவில், விமான நிலைய பாதுகாப்பு சோதனையை அவர் எவ்வாறு கடந்து சென்றார் என்பது குறித்தும், PDRM விசாரணை நடத்தி வருவதாக, அத்துறை கூறியது.
இந்த போதைப்பொருள் கடத்தல் வலையில் தொடர்புடையவர்களை கண்டறிய, இந்தோனேசிய அதிகாரிகளுடன் இணைந்து, PDRM விசாரணையை முன்னெடுத்து வருவதாகவும் அது சொன்னது.
--------
குடும்ப வன்முறையை கட்டுப்படுத்தும் நோக்கில், குடும்ப வன்முறை குற்றவாளிகளுக்கான தனி பதிவேடு ஒன்றை உருவாக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது !
இது குறித்து, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு, காவல்துறையுடன் இணைந்து, ஆய்வுச் செய்து வருகிறது.
இதன் வழி, மீண்டும் அந்த குற்றம் செய்யும் நபர்களை விரைவாக அடையாளம் கண்டு, கண்காணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
---------
திரங்கானுவில் அண்மையில் நடைபெற்ற மோட்டார்சைக்கிள் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற அல்லது அதில் கலந்துகொள்ளச் சென்ற மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள் தொடர்பான சாலை விபத்துகளில், உயிரிழப்பை உட்படுத்திய 11 சாலை விபத்துச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன !
கடுமையான காயங்களை ஏற்படுத்திய 4 விபத்துகளும் பதிவானதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்நிகழ்ச்சி காலகட்டம் மட்டுமே, 46 சாலை விபத்துகள் பதிவானதாக அத்துறை கூறியது.
----------
இதனிடையே, நாடு முழுவதும் நேற்று மட்டும், கிட்டத்தட்ட ஈராயிரம் சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 16 மரணங்கள் பதிவாகின !
---------
பினாங்கு George Town-னில், ஒரு வணிக வளாகத்தின் முதல் மாடியில் இருந்து, கல் மற்றும் மரக் கட்டமைப்பின் பகுதிகள் சரிந்து விழுந்ததில், இலங்கையைச் சேர்ந்த தம்பதி காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது !