
மலேசியாவில் மீண்டும் வங்காளதேச தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க வேண்டும் !
அவ்வாறு நாட்டிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் வங்காளதேச பிரதமர், Tarique Rahman கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அந்நாட்டிலிருந்து வரும் சட்டவிரோதத் தொழிலாளர்களை முறைப்படுத்துவது, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைத் திருப்பி அனுப்புவது குறித்தும், அவர் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கலந்து பேசியுள்ளதாகச் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
2023-ல், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு வந்தபோது, ஆட்சேர்ப்பு முகவர்களால் ஏமாற்றப்பட்டு சட்டவிரோதமாக வேலை தேட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.
சிலர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.
எனவே, ஈராண்டுகளுக்கு முன்பு, அந்நாட்டிலிருந்து தொழிலாளர்களைப் பணியமர்த்துவதை, மலேசியா கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
----------
நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களுக்கு வராமல் இருப்பதை தவிர்க்க வேண்டாம் என மக்களவை சபாநாயகர்,Tan Sri Johari Abdul, நாடாளுமன்ற உறுப்பினர்களை நினைவூட்டியுள்ளார் !
கூட்டத்தொடரில் கலந்துகொள்ள முடியாத எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும், சபாநாயகரிடமோ அல்லது மக்களவை செயலாளரிடமோ தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
15-ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான, இரண்டாவது கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
----------
3 மலேசிய யானைகள், பேராக் தைப்பிங்கிலிருந்து ஜப்பானுக்கு மாற்றப்பட்ட விவகாரத்தில், முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக எழுந்த கூற்றுகளைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது !
--------
சிலாங்கூரில் 4 நாட்களாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட Ops Cantas Bersepadu நடவடிக்கையின் கீழ், கைது செய்யப்பட்டுள்ள 349 பேரில், 39 பேர், அதிகம் தேடப்பட்டு வந்தவர்களாவர் என புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
----------
பிரிட்டன் பிரதமர் Keir Starmer, தொழிற்கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் மற்றும் கட்சித் தலைவர் பதவிகளில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் !
கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், குறைந்து வந்த மக்கள் ஆதரவு, அண்மைய உள்ளூர் தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுகள் ஆகியவற்றுக்கு மத்தியில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய கட்சித் தலைவர் தேர்வு செய்யப்படும் வரை, அவர் பிரதமராகத் தொடருவார் என்றும், அந்தத் தேர்வு அடுத்த மூன்று மாதங்களுக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.