
2027 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரிக் குறைப்பு, மக்களின் செலவிடக்கூடிய வருமானத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது !
இதன் வழி, குடும்பங்களும் வணிகத் துறையினரும் பயனடையலாம் என, மலாயா பல்கலைக்கழகப் பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனிநபர்களிடம் கூடுதல் வருமானம் இருப்பது, குடும்பங்களின் செலவுகளை நிர்வகிக்க உதவுவதுடன், அவர்களின் நிதி நிலைத்தன்மையையும் வலுப்படுத்தும் என்றும், அவர் கூறினார்.
2027 வரவு செலவுத் திட்டத்தில், ஆண்டுக்கு 1 லட்சத்து 50-ஆயிரம் ரிங்கிட் வரை வருமானம் பெறுவோருக்கான வருமான வரி, ஒரு விழுக்காட்டுப் புள்ளி குறைக்கப்பட்டுள்ளது.
அதே வேளை, தனிநபர் வரி நிவாரணத் தொகையும், 12-ஆயிரம் ரிங்கிட்டாக உயர்த்தப்படவுள்ளது.
--------
நாட்டில் அகதிகள் இருப்பது குறித்து அதிருப்தி கொண்டவர்கள், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என, உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார் !
அது தொடர்பான புகார்களை, அதிகாரிகளிடம் தெரிவிப்பதே சிறந்த நடவடிக்கை என, அவர் கூறினார்.
அகதிகள் சமூகத்தினரிடம் நேரடியாகச் சென்று, தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் சில குழுக்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து அறிந்த அவர் அவ்வாறு சொன்னார்.
---------
குழாய் உடைப்பு காரணமாக, பினாங்கில் 3 மாவட்டங்களில், நீர் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளது !
அதனால், 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அப்பணிகள், இரவு 8.35 மணிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
--------
சிலாங்கூர் Semenyih-வில் கடந்த மாதம் புதையுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட, டுரியான் விற்பனையாளர் கொலை தொடர்பில், நால்வர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர் !
அவர்கள் மீது, கொலை மற்றும் கொலைக்குத் துணைபோன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
---------
சிலாங்கூர், ஷா அலாமில் 11 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் தம்மீதான குற்றச்சாட்டை மறுத்தார் !