Skip to main content
வரவு செலவு திட்டம் தெளிவற்றதா ?

 

2027 வரவு செலவுத் திட்டம் தெளிவற்றதாக இருப்பதாக முன்வைக்கப்படும் கூற்றுகளை, பிரதமர் மறுத்துள்ளார் !

நாட்டின் பொருளாதார நிலை மற்றும், மக்களின் தேவைகளைப் பிரதிபலிக்கும் விரிவான தரவுகளின் அடிப்படையில், அந்த வரவு செலவுத் திட்டம் கவனமாகத் தயாரிக்கப்பட்டுள்ளதாக, Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.

இதன் வழி, STR மற்றும் SARA உதவிகளுக்கான ஒதுக்கீட்டை, 15 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்த முடிந்துள்ளதாகவும், தாம் பிரதமராகப் பொறுப்பேற்றபோது இருந்த தொகையுடன் ஒப்பிடுகையில், இது கிட்டத்தட்ட இரு மடங்காகும் என்றும் அவர் கூறினார்.

உலகச் சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்தாலும், மக்களின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைக்கும் வகையில், RON95 பெட்ரோலை, லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற மானிய விலையில், அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என அவர் மேலும் சொன்னார்.

---------

கருத்துகளை வெளிப்படுத்துவதும் விமர்சிப்பதும் நாகரிகமான முறையிலும் பொறுப்புடனும் அமைய வேண்டும் !

அதனை இணையவழி மிரட்டல்களுக்கு ஒரு சாக்காகப் பயன்படுத்தக் கூடாது என, மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பது, பிறரைத் துன்புறுத்துவது, மிரட்டுவது, அவமதிப்பது அல்லது தனிப்பட்ட முறையில் தாக்கி, அவர்களின் பாதுகாப்புக்கும், கண்ணியத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவது போன்ற செயல்களுக்கு வழிவகுக்கக் கூடாது என அவ்வாணையம் தெரிவித்தது.

கருத்துச் சுதந்திரத்தையும், பரஸ்பர மரியாதையையும் மதிக்கும் சமூகத்தில், அத்தகைய செயல்களை இயல்பான ஒன்றாகக் கருத, அனுமதிக்கக் கூடாது என்றும் MCMC கூறியது.

---------

நாட்டில் 25 பகுதிகளில், காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது !  

சிலாங்கூர், மலாக்கா உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில், காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு, 100-ரைக் கடந்து, ஆரோக்கியமற்ற அளவில் உள்ளது.  

--------

இதனிடையே, இந்தோனேசியாவில் காட்டுத் தீ மற்றும் நிலத் தீயைக் கட்டுப்படுத்த உதவும் வகையில், மலேசியா ஒரு தீயணைப்பு விமானம், 3 ஹெலிகாப்டர்கள் மற்றும் 50 பணியாளர்களை அனுப்ப முன்வந்துள்ளது !

எனினும், இந்த உதவியை வழங்க இந்தோனேசியாவின் அதிகாரப்பூர்வ அனுமதிக்காக மலேசியா காத்திருப்பதாக, துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid தெரிவித்துள்ளார்.

---------

கெடா, பேராக், ஜொகூர் உட்பட, சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது !

RAAGA Aaha Siranta Isai!