
வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் !
அத்துடன், ஆயிரக்கணக்கான படகுகள், விமானங்கள் மற்றும் தரைவழி வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
எந்தவோர் அவசரச் சூழலையும் எதிர்கொள்ளும் வகையில், தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு, மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதர முக்கியப் பங்காளி அமைப்புகளுடனும் இணைந்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்படும் சிறு வணிகர்களுக்கும் ரொக்க உதவி வழங்குவது தொடர்பான பரிந்துரையை அரசாங்கம் பரிசீலிக்கவுள்ளது.
தற்போது, வெள்ளம் காரணமாக நிவாரண மையங்களில் தங்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும் குடும்பத் தலைவர்களுக்கு மட்டுமே, ரொக்க உதவி வழங்கப்பட்டு வருகிறது.
----------
இதனிடையே, 5 மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன !
சிலாங்கூரில் 1,600-க்கும் மேற்பட்டோரும், பேராக்கில் 600-க்கும் அதிகமானோரும், அப்பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பஹாங்கில் 100-க்கும் மேற்பட்டோரும், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்காவில் சிலரும், PPS மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
----------
பேராக், Kuala Kangsar-ரில் உள்ள தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளியில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில், அப்பள்ளியின் CCTV காணொலிப் பதிவுகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன !
அதே வேளை, விசாரணைக்கு உதவ, அப்பள்ளியின் நிர்வாகப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர், தற்காலிகமாகப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
---------
ஜொகூர் TANGKAK-கில், இடைநிலைப் பள்ளி ஒன்றில், 14 வயது மாணவன், சக மூன்று மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு, WhatsApp குறுஞ்செய்திகள் தொடர்பான கருத்து வேறுபாடே காரணமாக இருக்கலாம் என, காவல்துறை தெரிவித்துள்ளது !
--------
பேராக் ஈப்போவில், கொள்ளைத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை குழுவை, துப்பாக்கியால் சுட்ட சந்தேக நபர் ஒருவர், காவல்துறையின் பதில் தாக்குதலில், சுட்டுக் கொல்லப்பட்டார் !