Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
32700
Company Email
naamnarpani@gmail.com
Contact number
0149242361
Display Contact Details
On
Description
பாரதி நெஞ்சங்களே! வணக்கம் . நாம் நற்பணி இயக்கம், பெருவாஸ் தமிழ்ப்பள்ளி இணைந்து படைக்கும் பாரதின் 143-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 7-ஆவது ஆண்டாக, எதிர்வரும் 21.12.2025 ஞாயிற்றுக் கிழமை, கங்கை நகரம் எனும் பெருவாஸ் நகரத்தில் மலரவிருக்கும் *‘நல்லதோர் வீணை செய்தே’* எனும் பாரதி இலக்கியத் திருவிழாவிற்குத் தங்கள் அனைவரையும் இனிதே வரவேற்பதில் பேருவகைக் கொள்கின்றோம். பாரதி - தன்னைச் சுற்றி எந்த வட்டத்தையும் வரைந்து கொள்ளாமல் எல்லையற்ற பிரபஞ்ச வெளியில் நின்றபடி தன் கவிதைச் சிறகுகளை அசைத்த கானக்குயில். விசாலப் பார்வையால் விண்ணையும் மண்ணையும் சேர்த்து விழுங்கியவை அவன் அக்கினிக் கவிதைகள். மானுடம் பாடிய அந்த மகாகவியின் கவிதைகளில் மயிலிறகின் வருடலையும் உணர முடியும், வாள்வீச்சின் கூர்மையையும் காண முடியும். தமிழின் சுவாசப் பையில் புதிய காற்றைப் புகுத்திய புரட்சியாளன் அவன். ஆயிரம் கோணங்களில் அவனுடைய கவிதைகள் மத்தாப்புகளாகவும் அணுக்குண்டுகளாகவும் தெறித்து விழுவதை நாம் காண முடியும். இந்த பாரதி இலக்கியத் திருவிருவிழாவில் பாரதி கீர்த்தனைகள், உயர்திரு ஐயா தமிழ்மாறன் அவர்களின் இலக்கிய சிறப்புரை, பாரதி கவிதைச் சாரல், பாரதி பாடல், பாரதி நடனம், பாரதி குழுமை பேச்சு, பாரதி கருத்துப் புதையல், என பாரதியைச் சிந்திப்பதற்கும் அவனது சிந்தனைகளை உய்த்துணர்வதற்கும் நெஞ்சிற்கினிய பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற அனைத்து வகையிலும் ஆலவிழுதுகள்போல் அணைத்து நிற்கும் எல்லா பாரதி நெஞ்சங்களுக்கும் பணிவான நன்றியும் வாழ்த்துகளும் என்றும் உரித்தாகுக. முற்றிலும் இலவயமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து தேனமுதம் பருக அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். தம் உயிர்மூச்சு வீழும்வரை தமிழை ஊனிலும் உயிரிலும் உயர்த்திப் பிடித்த பாரதியைக் கொண்டாடுவதும் தமிழைக் கொண்டாடுவதும் ஒன்றுதான்...நன்றி
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Sunday
Venue
SJK Tamil Beruas
Ticket admission
Free

RAAGA Aaha Siranta Isai!