சீனப் புத்தாண்டு நாளான நாளையும், நாளை மறுநாளுக்கான வானிலை நிலவரத்தைப் பார்க்கலாம் !
நாளை காலை: நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் வானிலை சீராக இருக்கும். ஆனால் ஜொகூர், சபா மற்றும் சரவாக்கில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில், தீபகற்ப மாநிலங்களின் மத்திய மற்றும் தென் பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனிடையே நாளை மறுநாள், பஹாங், ஜொகூர், சபா மற்றும் சரவாக்கின் சில பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அந்நாளில் நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாடு முழுவதும், முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று காலை, போக்குவரத்து சுமூகமாகவும், கடுப்பாட்டிலும் இருந்தது !
வானிலையும், பயணத்திற்கு ஏற்ற வகையில் சாதகமாகவே இருந்ததாக, மலேசிய நெடுஞ்சாலை வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாண்டுக்கான ரமலான் சந்தைகள் காரணமாக, நாளை முதல், மார்ச் 22-ஆம் தேதி வரை, தலைநகர் Jalan Raja Alang சாலை போக்குவரத்துக்கு மூடப்படும் !
அங்கு சந்தைகள் சீராக இயங்க அது அவசியமாவதாக, கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.