Skip to main content

Advertisement

Swiss பொது பூப்பந்து போட்டி; மலேசியாவுக்கு ஒரே வாய்ப்பு!

 

Swiss பொது பூப்பந்து போட்டியில் ஒரே ஒரு மலேசிய பிரதிநிதி மட்டுமே எஞ்சியுள்ளனர்! 

இந்தோனேசிய வீரர்களை வீழ்த்திய, ஆடவர் இரட்டையர் Kang Khai Xing மற்றும் Aaron Tai இணை, காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறது. 

எனினும் Nur Azryn Ayub – Tan Wee Kiong உள்ளிட்ட எஞ்சிய நான்கு பிரதிநிதிகளும், இரண்டாம் சுற்றோடு தோல்வி கண்டு வெளியேறினர். 

- 

ஆஸ்திரேலிய பொது Squash போட்டியின் அரையிறுதிக்குச் சென்றுள்ளார் தேசிய நட்சத்திரம் S சிவசங்கரி! 

தொடையில் ஏற்பட்ட காயத்தால் அவரை எதிர்த்து விளையாடவிருந்த Aira Azman அப்போட்டியிலிருந்து விலகிக் கொண்டதை அடுத்து, சிவசங்கரி அடுத்து சுற்றுக்குச் சென்றார். 

- 

உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஈரான் பங்கேற்காது என்ற ஆருடம் வலுத்து வருகிறது! 

அவர்களின் பாதுகாப்பு கருதி, ஈரான் அப்போட்டியில் கலந்து கொள்வது இப்போதைக்கு சரி வராது என, அமெரிக்க அதிபர் Donald Trump கூறியிருக்கிறார். 

அமெரிக்காவின் தாக்குதலுக்கு மத்தியில் எவ்வாறு அப்போட்டியில் கலந்துக் கொள்வது என, ஈரானின் விளையாட்டு அமைச்சர் முன்னதாகக் கேள்வி எழுப்பியிருந்தார். 

 

RAAGA Aaha Siranta Isai!