Skip to main content

Advertisement

Submitted by syazwan_mutali… on
Start Date
End Date
Postcode
13100
Company Email
btskpenang@gmail.com
Contact number
0175731011
Description
பினாங்கில் தமிழ் இலக்கிய விழா 2026 பினாங்கு மாநிலத் தமிழாசிரியர் அமைப்பு மற்றும் மலேசியத் தமிழாசிரியர் அறவாரியத்தின் கூட்டு ஏற்பாட்டில், மலேசியத் தமிழ் எழுத்துலக வரலாற்றில் ஒரு மகுடத் தருணமாக "பினாங்கு மாநிலத் தமிழ் இலக்கிய விழா 2026" மற்றும் "மலேசியத் தமிழ் எழுத்தாளர் நூல்வனம் 2026" புத்தகக் கண்காட்சி மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்குத் தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது பெற்ற புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியரும், எழுத்தாளரும், பட்டிமன்றச் சொற்பொழிவாளருமான பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிறப்பிக்கவுள்ளார். முக்கிய நிகழ்வுகள் & சிறப்பம்சங்கள்: • 6 புதிய நூல்கள் வெளியீடு: தேசிய அளவிலான சிறுகதைப்போட்டியில் வென்ற ஆசிரியர்கள், மாணவர்களின் கதைகள் அடங்கிய "அகரம்", "அரும்பு", "அமிழ்து" ஆகிய 3 தொகுப்பு நூல்களும், முன்னணி எழுத்தாளர் ஐயா திரு. ச.விஸ்வநாதன் (விச்சு மாமா) அவர்களின் "பொன்னியின் செல்வன்", "கர்ணன்", "விச்சு மாமாவின் சிறுவர் சிறுகதைகள்" ஆகிய 3 புதிய நூல்களும் என மொத்தம் 6 நூல்கள் ஒரே மேடையில் வெளியிடப்படும். • பிரமாண்ட புத்தகக் கண்காட்சி: நாட்டின் 50-க்கும் மேற்பட்ட முன்னணி மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படும். எழுத்தாளர்களுக்குத் தனித்தனி விற்பனைக் கூடங்கள் (Booth) முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் • கலை நிகழ்ச்சிகள்: முத்தமிழைக் கொண்டாடும் வகையில் மாணவர்களின் படைப்பாற்றல் நிகழ்ச்சிகள், விச்சு மாமாவின் இலக்கிய நாடகம், பரதநாட்டியம், சிலம்பம் மற்றும் இசை விருந்து இடம்பெறும். 1. பினாங்கு மாநிலத் தமிழ் இலக்கிய விழா விவரங்கள்: • நாள்: 25 ஜூலை 2026 (சனிக்கிழமை) • நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை • இடம்: மில்லேனியம் மண்டபம், கெப்பளா பத்தாஸ், பினாங்கு (Millennium Hall, Kepala Batas) • தொடர்புக்கு 017-5731011
Target Audience
General
Infozone Category
State
webform_sid
72837
Days
Saturday
Venue
Millennium Hall, Kepala Batas
Ticket admission
-

RAAGA Aaha Siranta Isai!