Skip to main content

Advertisement

Submitted by syazwan_mutali… on
Start Date
End Date
Postcode
68100
Company Email
srimurugancentre@gmail.com
Contact number
0108836981
Description
ஶ்ரீ முருகன் நிலையத்தின் 32-வது மஹா கல்வி யாத்திரை இந்திய மாணவர்களை கல்வியில் முன்னோக்கி நகர்த்த உந்து சக்தியாக இருப்பதற்கு பத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் 32வது ஆண்டு கல்வி யாத்திரை சிறப்பாக நடைபெறவுள்ளது. சமயம் வழி கட்டொழுங்கு; கட்டொழுங்கின் வழி கல்வி என்ற மாபெரும் கல்வி தத்துவத்தை முன்வைத்து நமது மாணவர்களின் அறியாமையை அகற்றி, பலவீனங்களைப் போக்கி, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய நேர்மறை எண்ணங்களை நம் மாணவர்களின் மனதில் விதைக்கும் நோக்கத்தில் இந்த கல்வி யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்திய குடும்பமும் ஆரோக்கியம், கல்வி, பொருளாதார வளர்ச்சி, சுபிட்சம் ஆகியவற்றைப் பெற, முருகப்பெருமானின் ஆசியுடன் உள்ளார்ந்த சக்தியை உணர்ந்து, சவால்களை சமாளித்து, முயற்சியில் திகழ்ந்து, வெற்றியை உணர்வதற்காக, நாம் அனைவரும் ஒருமனதாக அந்நாளில் பிரார்த்தனையில் இணைவோம். சிறப்பு அங்கங்கள்; 1. மஹா வித்யா யாகம் 2. மாணவர்களை எழுச்சியூட்ட சிறப்பு தன்முனைப்பு அங்கங்கள் 3. ⁠கல்வி கருத்தரங்கு 4. ⁠பங்கேற்கும் ஒவ்வொரு இந்திய குடும்பங்களுக்கும் ஒற்றுமை வேல் வழங்கப்படும் SMC கல்வி யாத்திரை 02 ஆகஸ்ட் 2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை மணி 7.00 பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயம் அனைத்து இந்திய குடும்பங்களையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். மேல் விபரங்களுக்கு www.facebook.com/srimurugancentre.officialpage
Target Audience
General
Infozone Category
State
webform_sid
106073
Days
Sunday
Website
www.smc.com.my
Venue
Sri Subramaniar Swamy Temple, Batu Caves
Ticket admission
Free

RAAGA Aaha Siranta Isai!