
சிலாங்கூர் SUKMA போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட 132 வீரர்கள், அடுத்தாண்டு நடைபெறவுள்ள SEA விளையாட்டுப் போட்டியில், தேசிய அணியில் இடம்பெறக்கூடியவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் !
வீரர்கள் தங்களின் ஆட்டத்திறன், நிலையான செயல்பாடு, உடற்தகுதி, காயங்களின் நிலை மற்றும் தேசிய, அனைத்துலக சாதனைகள் அடிப்படையில் தொடர்ந்து மதிப்பிடப்படுவர் என, இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்கால தேசிய வீரர்களைக் கண்டறிந்து வளர்ப்பதற்கான முக்கிய தளமாக SUKMA தொடர்ந்து விளங்குகிறது.
இவ்வாண்டு போட்டியில் பல வீரர்கள் புதிய சாதனைகளைப் படைத்துள்ளதாகவும் கூறி, அமைச்சு பெருமிதம் கொண்டது.
----------
Manchester United-டின் புதிய வீரர் Carlos Baleba, ரசிகர்களின் அபிமானத்தைப் பெறுவார் என, அணி கேப்டன் Bruno Fernandes நம்பிக்கை தெரிவித்துள்ளார் !
22 வயதான Baleba, துடிப்புடன் செயல்படக்கூடியவர், உடல் வலிமை மிக்கவர் என்றும், அணியை முன்னோக்கி வழிநடத்தும் திறன் கொண்டவர் என்றும் Fernandes வர்ணித்தார்.
Baleba-வை Brighton-னில் இருந்து 70 மில்லியன் பவுண்ட் தொகையில் United ஒப்பந்தம் செய்துள்ளது.
அவரைத் United-டுக்குக் கொண்டுவரும் முயற்சி, கிட்டத்தட்ட ஈராண்டுகளாக நீடித்ததாகக் கூறப்படுகிறது.
----------
Liverpool, PSG-யின் Bradley Barcola-வை, ஆட்டக்காரர்களை வாங்கும் விற்கும் தவணை முடிவடைவதற்குள் ஒப்பந்தம் செய்துவிட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளதாம் !
அதன் தொடர்பில், Liverpool, PSG நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
France தேசிய அணிக்காக விளையாடும் அவருக்கான தொகை, 145 மில்லியன் பவுண்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.