
கொரிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில், இன்று சில தேசிய பிரதிநிதிகள், 2-ஆம் சுற்றில் கால் பதித்துள்ளனர் !
முதல் சுற்றில், கலப்பு இரட்டையர் Jimmy Wong - Cheng Su Yin, ஜப்பானிய ஜோடியை தோற்கடித்து, அச்சுற்றுக்கு முன்னேறினர்.
Chen Tang Jie - Clarissa SAN, சகநாட்டு இணையான Low Han Chen - Chan Wen Tse-வை தோற்கடித்தனர்.
ஆடவர் இரட்டையர் Aaron Chia - Aaron Tai, இந்திய ஜோடியை வீழ்த்தினர்.
----------
Manchester City, Chelsea-யின் Pedro Neto-வின் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன !
அதுவே Savinho, ஆட்டக்காரர்களை வாங்கும் விற்கும் தவணைக்கு முன்பே அணியை விட்டு வெளியேறினால், அவருக்குப் பதிலாக புதிய வீரர் ஒருவரை ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலை சிட்டிக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகவே, Neto-வை, அணியில் இணைப்பது தொடர்பில், சிட்டி, பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
-----------
Manchester City மத்தியதிடலாட்டக்காரர் Tijjani Reijnders-சை ஒப்பந்தம் செய்வதில், Nottingham Forest ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது !
கடந்த பருவத்தில், AC Milan-னில் இருந்து, சிட்டியில் இணைந்த அந்த நெதர்லாந்து வீரர், குறுகிய காலத்திலேயே, அந்த அணியை விட்டு வெளியேறும் நிலையை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------
உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள Carlos Alcaraz, காயத்தில் இருந்து தொடர்ந்து குணமடைந்து வரும் நிலையில், Cincinnati மாஸ்டர்ஸ் தென்னிஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார் !