Skip to main content

Advertisement

2 தேசிய பிரதிநிதிகள் நேருக்கு நேர் மோதல் !

 

 

தேசிய பூப்பந்து ஆடவர் இரட்டையர் Aaron Chia - Soh Wooi Yik ஜோடி பிரிக்கப்பட்டதற்குப் பிறகு, அவர்களுக்குள் பிளவு ஏற்பட்டதாக வந்த கூற்றுகளை, பயிற்றுநர்  Herry Iman Pierngadi மறுத்துள்ளார் !

இந்த முடிவு, தேசிய அணியை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

பல ஆடவர் இரட்டையர் ஜோடிகளில் புதிய, வலுவான இணையைக் கண்டுபிடிக்க மாற்றங்கள் செய்யப்பட்டன.

குறிப்பாக, அண்மைய மாதங்களில்  Aaron Chia - Wooi Yik-கின் ஆட்டத்திறன் குன்றி காணப்பட்டதால், அவர்களைப் பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது, என்றாரவர்.

---------

2026 காற்பந்து திருவிழா குறித்த செய்திகளைக் காண்போம் !

Haiti-க்கு எதிரான நாளைய இரண்டாவது குழு நிலையிலான ஆட்டத்தில், Brazil நட்சத்திரம் Neymar களமிறங்கவில்லை !

அவர் காயம் பிரச்சனையில் இருப்பதே அதற்குக் காரணம்.

அவர், முதல் ஆட்டத்தில்  கூட விளையாடவில்லை.

----------

இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில், தென் கொரியா-வை 1-0 என வீழ்த்தி, Mexico, கடைசி 32 அணிகளுக்கான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது !

--------

Yan Diomandé-வை ஒப்பந்தம் செய்யக் கோரி,  RB Leipzig-க்கு அனுப்பிய Liverpool-லின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது !

அவரை அணியிலேயே வைத்திருக்க அந்த Bundesliga அணி விரும்புகிறது ; இல்லையெனில் 100 மில்லியன் யூரோவுக்கு மேற்பட்ட மதிப்பில் வரும் விண்ணப்பத்தையே ஏற்க, அது தயாராக உள்ளதாம்.

RAAGA Aaha Siranta Isai!