
22 ஆண்டுகள் கழித்து Arsenal EPL வெற்றியாளரான தருணம் தமக்கு மிகுந்த பெருமையைத் தருவதாகக் கூறியுள்ளார் அதன் நிர்வாகி Mikel Arteta!
இந்த மகிழ்ச்சியைத் தந்த தமதணி வீரர்களையும் அவர் பாராட்டியுள்ளார்.
இதனிடையே Man City நிர்வாகி Pep Guardiolaவும், Artetaவின் இந்த சாதனைக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றார்.
அவரது அணி Bournemouthவுடனான அதிகாலை ஆட்டத்தில் 1-1 என சமநிலை மட்டுமே கண்டு, Arsenalலுடனான புள்ளி வித்தியாசத்தை நான்காக வைத்துள்ளது.
அவ்விரு அணிகளுக்கும் பருவம் முடிய இன்னும் ஒரு லீக் ஆட்டம் எஞ்சியிருந்தாலும்,புள்ளி வித்தியாசத்தில் Gunnersசுக்கு வெற்றிப் பட்டம் சொந்தமாகிவிட்டது.
-------
வட அமெரிக்காவில் நடைபெறும் கால்பந்து திருவிழாவில் போர்ச்சுகல் சார்பில் கலந்து கொள்ள, Cristiano Ronaldo தேர்வாகியுள்ளார்!
41 வயதாகும் Ronaldo ஆறாவது ஆண்டாக அந்த அனைத்துலகக் கால்பந்து போட்டியில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.
-----
உலகக் கிண்ண Sepaktakraw போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை 2-0 என வீழ்த்தி, quadrant பிரிவு வெற்றியாளராகியுள்ளது மலேசியா.
-----
ஒலிம்பிக் போட்டிக்கான அரசாங்கத்தின் Road To Gold திட்டத்தில், எடை தூக்கும் வீரர் Muhamad Aznil Bidin மற்றும், squash வீரர் Ng Eain Yow ஆகியோரை புதுமுகங்களாக அறிவித்துள்ளது இளைஞர் விளையாட்டு அமைச்சு.