Skip to main content

Advertisement

30 நிமிடங்களுக்குப் பிறகு, Liverpool-லுக்கு என்னவாயிற்று ?

 

Liverpool-லால், தேவையான அளவிலான ஆட்டத் திறனைத், தொடர்ந்து வெளிப்படுத்த முடியவில்லை என, அதன் நிர்வாகி Andoni Iraola தெரிவித்துள்ளார் !

நேற்று நடைபெற்ற நட்புமுறை கால்பந்தாட்டத்தில், Liverpool, 3-3 என Monaco-விடம் வீழ்ந்ததை அடுத்து, அந்த புதிய நிர்வாகி அவ்வாறு சொன்னார்.

ஆட்டம் தொடங்கிய முதல் 30 நிமிடங்களில், Liverpool வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம், ஆட்டத்தின் இறுதிவரை நீடிக்கவில்லை. என்றாரவர்.

இம்மாத தொடக்கத்தில், அது, 2-4 என Leeds United-டிடம் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

----------

Arsenal-லில் Bruno Guimaraes இணைந்துள்ளதை அடுத்து, Martin Zubimendi-யின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன !

இதனால், அவரை விற்பது தொடர்பில், Arsenal நிர்வாகம் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

அவரை வாங்க கோரி வரும் கிளப்பிடம், The Gunners, 78 மில்லியன் பவுண்ட் தொகையைக் கேட்கலாம்.

இந்நிலையில், Chelsea-யும், Real Madrid-டும் , Gunners-சில் அவரின் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனவாம்.

--------

இங்கிலாந்து தேசிய அணியின் நட்சத்திர வீரர் Harry Kane, Bayern Munich-குடனான ஒப்பந்தத்தை, 2029-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது !

அது குறித்து, அக்கிளப்புடன் அவர் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

RAAGA Aaha Siranta Isai!