Skip to main content

Advertisement

Aaron Chia-Aaron Tai-யிடம் நல்ல முன்னேற்றம் !

 

தேசிய ஆடவர் இரட்டையர் Aaron Chia-Aaron Tai இணைந்து விளையாடிய இரண்டாவது போட்டியிலேயே, தைவான் பொது பூப்பந்து போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது, தங்களின் சிறப்பான முன்னேற்றத்தை காட்டுவதாக தெரிவித்துள்ளனர் !

இதே ஆட்டத்தரத்தை, இவ்வாரம் நடைபெறவுள்ள கொரிய மாஸ்டர்ச் பூப்பந்து போட்டிக்கும் கொண்டு செல்லும் நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக அவர்கள் கூறினர்.

அதே சமயம், மகளிர் இரட்டையர் Pearly Tan-M. Thinaah, Pearly காயமடைந்த பிறகு, தங்களின் பழைய ஆட்டத்திறன் தற்போது படிப்படியாக மீண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இம்மாத இறுதியில், இந்தியா புதுடெல்லியில் நடைபெறவுள்ள உலக பூப்பந்து போட்டிக்காக, தங்களின் உடற்தகுதியை மேலும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளதாகவும், அவர்கள் கூறினர்.

--------

பளுதூக்கும் விளையாட்டுக்கு, ஆண்டுதோறும் 10 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்க வேண்டும் எனும் பரிந்துரையை, மலேசிய ஒலிம்பிக் மன்றம் வரவேற்றுள்ளது !

வீரர், வீராங்கனைகளை தொடர்ந்து உருவாக்கவும், பளுதூக்கும் விளையாட்டின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தவும், இந்த நிதி உதவும் என அம்மன்றம் தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்று முடிந்த Commonwealth விளையாட்டுப் போட்டியில், மலேசிய பளுதூக்கும் அணி 5 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றதெ அதற்குக் காரணம்.

---------

ரியால் மாட்ரிட் நட்சத்திர வீரர் Vinicius Jr-ரை ஒப்பந்தம் செய்யும் முயற்சியை Arsenal தீவிரப்படுத்தியுள்ளது !

அவரை வட லண்டனுக்கு அழைத்து வருவதற்காக, Arsenal நிர்வாகி Mikel Arteta, நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

உலகின் தலைசிறந்த தாக்குதல் ஆட்டக்காரர்களில் ஒருவரான Vinicius-சை, ரியாலில் இருந்து பிரிப்பது மிகவும் கடினமானது என்பதை, Arsenal நன்கு அறிந்துள்ள போதும், அவரை சம்மதிக்க வைக்கும் வகையில் Arteta, மிகவும் மனதை கவரக்கூடிய வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

RAAGA Aaha Siranta Isai!