Skip to main content

Advertisement

ஆசிய போட்டியில் இன்று தங்கம் கிடைக்குமா?

 

 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று தாய்லாந்தை இறுதிச் சுற்றில் சந்திக்கிறது தேசிய Sepak takraw அணி!

 

அரையிறுதியில் தேசிய அணி 2-1 என இந்தோனேசியாவை வென்றது.

 

இதனிடையே  ஆசிய போட்டியில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் Muhammad Azeem Mohd Fahmi மற்றும் Muhammad Umaira Subri அரையிறுதிக்கு முன்னேறினர்.

 

-----

 

Squash பிரிவில் தென் கொரிய வீரரை மூன்று செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார் நாட்டின் Ng Eain Yow!

 

அதே வேகத்தை தங்கம் வெல்லும் வரை தக்க வைத்துக் கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

ஆசிய விளையாட்டுப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை Astro ARENA, Stadium Astro, ஐந்து பிரத்தியேக அலைவரிசைகள் மற்றும் Astro Go-வில் காணலாம்.

 

----

 

Nations லீக் கால்பந்து போட்டியை வெற்றியுடன் தொடக்கியிருக்கிறது நோர்வே!

 

அதிகாலை டென்மார்க்கைச் சந்தித்த அவ்வணி Erling Haaland போட்ட இரு கோல்கள் உதவியோடு 3-2 என வெற்றிப் பெற்றது.

 

மற்ற முக்கியமான ஆட்டங்களில் போர்ச்சுகல் வேல்சை 1-0 என வீழ்த்தியது.

 

Austria, இஸ்ரேலை 3-1 என தோற்கடித்தது.

 

நெதர்லண்ட்சும் ஜெர்மனியுடன் 1-1 என சமநிலை கண்டன.

 

செர்பியா 1-2 என Greeceசிடம் வீழ்ந்தது.

 

 

RAAGA Aaha Siranta Isai!