Skip to main content

Advertisement

அமெரிக்கா அச்சத்தில் உள்ளதா ?

 

 

Paraguay-வுக்கு எதிரான நாளைய, காற்பந்து திருவிழாவின் தொடக்க ஆட்டம் கடினமானதாக இருக்கும் என, அமெரிக்க தலைமை பயிற்றுநர் Mauricio Pochettino தெரிவித்துள்ளார் !

Paraguay, கடுமையான போட்டி கொடுக்ககூடியது என Pochettino சொன்னார்.

என்றாலும், 26 பேர் கொண்ட தமதணி, அவ்வாட்டத்துக்குத் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.

--------

காற்பந்து திருவிழாவில், அர்ஜெந்தினா சார்பில் Aston Villa-வின் Emiliano Martínez களமிறங்கவுள்ளதாக, விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன !

அவர் காயத்தில் இருந்து குணமடைந்திருப்பதே அதற்குக் காரணமாம்.

------------

செக் குடியரசுடனான காற்பந்து திருவிழாவின் குழு நிலையிலான ஆட்டத்தில், தென் கொரியா, தாம் சொன்ன வழிமுறைகளை சரியாக பின்பற்றியதாக, அதன் பயிற்றுநர் தெரிவித்துள்ளார் !

அதனாலேயே இன்று, தென் கொரியா, 2-1 என, செக் குடியரசை வெல்ல முடிந்திருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

--------

இதனிடையே, காற்பந்து திருவிழாவின் குழு நிலை ஆட்டத்தில், செக் குடியரசு, தென் கொரியாவிடம் தோல்வியடைந்தாலும், அதன் பயிற்றுநர் தனது வீரர்களின் முயற்சியை பாராட்டியுள்ளார் !

அதே நேரத்தில், தாக்குதல் அரணில் கூடுதல் பலம் தேவை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

----------

ஆஸ்திரேலிய பொது பூப்பந்து போட்டியில், மலேசியாவின் பயணம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது !

காலிறுதியில் ஆடிய இரண்டு தேசிய பிரதிநிதிகளும், தோல்வியுற்று வெளியேறினர் ; அதில், ஆடவர் ஒற்றையர் Justin Hoh-வும் அடங்குவார். 

RAAGA Aaha Siranta Isai!