Skip to main content

Advertisement

அனைத்துலக கால்பந்துக்கு விடை கொடுக்கிறார் Ronaldo !

 

அனைத்துலக கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள Cristiano Ronaldo-வுக்கு, பல்வேறு தரப்பினரும், தங்களது பாராட்டுகளையும் புகழாரங்களையும் தெரிவித்து வருகின்றனர் !

Ronaldo, போர்ச்சுகல் நாட்டின் பெருமையை உலகளவில் உயர்த்தியதுடன், இளம் தலைமுறை கால்பந்து வீரர்களுக்கு, முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளதாக, அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கால்பந்து உலகிற்கு ரொனால்டோ ஆற்றிய பங்களிப்பும் அவரது சாதனைகளும் என்றும் நினைவுகூரப்படும் என்றும், அவரது பெயர் கால்பந்து வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும், அனைத்துலக கால்பந்து அமைப்பின் தலைவர் புகழாரம் சூட்டினார்.

இம்மாதம் நடைபெறும் அனைத்துலக போட்டிகளுக்கான இடைவேளைக்குப் பிறகு, Ronaldo தனது அனைத்துலக கால்பந்து வாழ்க்கைக்கு, அதிகாரப்பூர்வமாக விடைகொடுக்கவுள்ளார்.

----------

Bayern Munich-குடனான Harry Kane-னின் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது !

அந்த நட்சத்திரம், அவ்வணியில் ஈராண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

Bayern-னில் தான், தாம் சொந்த வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வைப் பெறுவதாக Kane சொன்னார்.

--------

Kuching City, தென் கொரிய அணியான Gangwon-னை பழிதீர்த்துள்ளது !

நேற்றைய ACL 2 கால்பந்தாட்ட குழு நிலையிலான ஆட்டத்தில், Kuching City, 2-0 என Gangwon-னை தோற்கடித்தது.

முந்தைய ஆட்டத்தில், Kuching City, 0-1 என Gangwon-னிடம் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

---------

கொரிய பொது பூப்பந்து போட்டியில், ஆடவர் இரட்டையர் Man Wei Chong - Tee Kai Wun உள்ளிட்ட 3 தேசிய ஜோடிகள், இன்று இன்று காலிறுதியில் களம் காண்கின்றனர் !

கொரிய பொது பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை, இன்று காலை 11 மணி தொடங்கி, Astro அலைவரிசை 815-திலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.

RAAGA Aaha Siranta Isai!