Skip to main content

Advertisement

Anderson-னுக்கு விடமால் அடிபோடும் City !

 

Nottingham Forest-டின் Elliot Anderson-னை ஒப்பந்தம் செய்யும் பேச்சுவார்த்தையில் இருந்து, Manchester City இன்னும் பின் வாங்காமால் உள்ளது !

சிட்டி அனுப்பிய அவருக்கான முதல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

காரணம், Nottingham-முக்கு, அந்த மத்திய திடலாட்டக்காரரை விற்க, 100 மில்லியன் பவுண்ட் தொகை வேண்டுமாம்.

அதுவே அவரை ஒப்பந்தம் செய்ய முடியாமல் போனால், மாற்றுத் தேர்வாக Newcastle United-டின் Sandro Tonali-யை சிட்டி பரிசீலிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Arsenal-லும், Tonali மீது ஆர்வமாக உள்ளதாம்.

----------

Bruno Fernandes, அணியிலேயே தொடர்ந்து இருக்க தாம் விரும்புவதாக, Manchester United தலைமை நிர்வாகி Omar Berrada தெரிவித்துள்ளார் !

2026 ஆட்டக்காரர்களை வாங்கும் விற்கும் தவணை, கடந்த பருவம் மாதிரியே நடைபெறும் எனவும் அவர், செய்தியாளர்களிடம் கூறினாராம்.

அதே சமயம், நிர்வாகி Michael Carrick, Fernandes-சுக்கு பொருந்தும் வீரர்களை ஒப்பந்தம் செய்ய விரும்புவார் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

----------

மீண்டும் Road To Gold திட்டத்தில் சேர வாய்ப்பு கிடைத்தால், பெருமையாகக் கருதுவேன் என, தேசிய சைக்கிளோட்ட வீரர் Datuk Azizulhasni Awang தெரிவித்துள்ளார் !

இவ்வாண்டு அனைத்துலக அரங்கில் சிறப்பான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தியதையடுத்து, அவர் அவ்வாறு சொன்னார்.

அவர் முன்பு RTG திட்டத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

RAAGA Aaha Siranta Isai!