
2026 காற்பந்து திருவிழா குறித்த செய்திகளைப் பார்க்கலாம் !
Colombia, கடைசி 16 அணிகள் மோதும் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
கடைசி 32 அணிகளுக்கான ஆட்டத்தில், அது, 1-0 என Ghana-வை வீழ்த்தியது.
அதே வேளை, அர்ஜென்டினாவும் கடைசி 16 அணிகளுக்கான சுற்றில் கால் பதித்திருக்கின்றது.
இன்று காலை, அந்த ஜாம்பவான் அணி, 3-2 என, Cape Verde-டை வீழ்த்தியதே அதற்குக் காரணம்.
Argentina-வின் 3 கோல்களில் முதல் இரண்டு கோல்களை, Lionel Messi-யும், Lisando Martinez-சும் அடித்தனர்.
இதையடுத்து, அடுத்த மோதலில், அர்ஜென்டினா, இன்று காலை 4-2 என பெனால்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த எகிப்தைச் சந்திக்கும்.
இதனிடையே, Lionel Messi, காற்பந்து திருவிழா வரலாற்றில், தொடர்ந்து 8 ஆட்டங்களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அது போக, இப்போட்டி வரலாற்றில், 30 ஆட்டங்களில் களமிறங்கிய முதல் மற்றும் ஒரே வீரர் என்ற சாதனையையும், Messi படைத்திருக்கின்றார்.