Skip to main content

Advertisement

Arsenal-லை Atletico தோற்கடிக்கப்போகிறதா ?

  

Atletico Madrid-டுக்கு எதிரான Champions லீக் இரண்டாம் கட்ட அரையிறுதியாட்டம், Arsenal-லுக்கே சாதகமாகலாம் ! 

  

The Gunners, தனது சொந்த அரங்கில் விளையாடுவதே அதற்குக் காரணம். 

  

ஆனால், Atletico நிர்வாகி Diego Simeone-வோ, அந்த ஆட்டத்தை தமதணி கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறுகிறார். 

  

Arsenal, பிரிமியர் லீக் பட்டத்தை வெல்லும் பந்தயத்தில் இருப்பதால், அதன் வீரர்கள் மன அழுத்தத்திலும் சோர்விலும் இருக்கக்கூடும் 

  

இதனால் தமதணி வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம் என Simeone சொன்னார். 

  

முதற்கட்ட ஆட்டத்தில் அவ்விரு அணிகளும், 1-1 என சமநிலை கண்டன. 

  

Arsenal - Atletico Madrid மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, அதிகாலை 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 820-திலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம். 

  

---------- 

  

தேசிய பூப்பந்து மகளிர் இரட்டையர் வீராங்கனை Pearly Tan, மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறார் ! 

  

அவர் முதுகு காயம் காரணமாக, சுமார் ஒரு மாதம், போட்டிகளில் இருந்து விலகியிருந்தார். 

  

அண்மையில் நடைபெற்ற ஊபர் கிண்ண பூப்பந்து போட்டியிலும், அவர் பங்கேற்கவில்லை ; அவருடைய இணை M.தீனா வேறொருவருடன் விளையாடினார். 

  

----------- 

  

ஆசிய கிண்ண ஹாக்கி போட்டியில், மலேசியா, B குழுவில், பாகிஸ்தான், வங்காளதேசம், சீனா என கடினமான போட்டி கொடுக்கக்கூடிய அணிகளுடன் இருந்தாலும், அரையிறுதிக்கு முன்னேற முயற்சிக்கிறது ! 

  

பாகிஸ்தான் தான் மலேசியாவின் முக்கிய சவாலான அணியாகக் கருதப்படுகிறது. 

 

RAAGA Aaha Siranta Isai!