
22 ஆண்டுகளுக்குப் பிறகு, Arsenal பிரிமியர் லீக் கிண்ணத்தை கைப்பற்றியதற்கு, அதன் ரசிகர்களின் இடைவிடாத ஆதரவும், முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது !
பல ஆண்டுகளாக தோல்விகளையும் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்த போதிலும், The Gunners அணிக்கான ரசிகர்களின் அன்பும் ஆதரவும் ஒருபோதும் குறையவில்லை என, அதன் நீண்ட கால தீவிர ரசிகர் சார்த்திபன் சேகரன் தெரிவித்தார்.
கடந்த சில பருவங்களாக புள்ளிப்பட்டியலில் Arsenal தொடர்ந்து இரண்டாவது இடத்தையே பிடித்து நின்றதற்கு, கடைசி நேர கவனச் சிதறலே காரணம் என சார்த்திபன் சொன்னார்.
எனினும், தொடர் முயற்சி, பயிற்சி என அனைத்தும் இருந்தால், நிச்சயம் வெற்றியை நாடலாம் என அவர் சொன்னார்.
நேற்று Manchester City - Bournmouth-துக்கு இடையிலான ஆட்டம், 1-1 என சமநிலையில் முடிந்தது.
இதையடுத்து, Gunners-சுடனான புள்ளி வித்தியாசத்தை சிட்டி, நான்காக வைத்து.
அதனால், என்னதான் சிட்டிக்கும், Gunners-சுக்கும் இன்னும் ஒரு லீக் ஆட்டம் எஞ்சியிருந்தாலும், புள்ளி வித்தியாசத்தில், Gunners-சுக்கு வெற்றிப் பட்டம் சொந்தமாகிவிட்டது.
----------
சிங்கப்பூர் பொது பூப்பந்து போட்டியில், தேசிய பூப்பந்து மகளிர் இரட்டையர் Pearly Tan - M Thinaah, களமிறங்குகின்றனரா என்பது குறித்த முடிவு, சனிக்கிழமை எடுக்கப்படும் !
Pearly Tan இன்னும் முதுகு காயத்தில் இருப்பதே அதற்குக் காரணம்.
எனவே, அவரது உடல் நிலையைப் பொறுத்தே முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------
மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில், தேசிய பூப்பந்து ஆடவர் இரட்டையர் Arif Junaidi - Yap Roy King, காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர் !
அவர்கள், சக நாட்டு ஜோடியான Kang Khai Xing - Aaron Tai-யை வீழ்த்தினர்.
மகளிர் ஒற்றையர் K.லெட்ஷனாவும் காலிறுதியில் கால் பதித்தார்.