
பிரிமியர் லீக்கில், ஆட்டக்காரர்களை வாங்கும், விற்கும் தவணை முடிவடையும் நாளில், பல முக்கிய ஆட்டக்காரர்களின் ஒப்பந்தங்கள் இறுதி நேரத்தில் கைகூடாமல் போயுள்ளன !
Folarin Balogun-னை ஒப்பந்தம் செய்ய Everton மேற்கொண்ட முயற்சி, அவரது மருத்துவப் பரிசோதனையில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக தோல்வியடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை தமதணியில் சேர்க்க Everton தொடர்ந்து முயற்சி செய்த வேளை, Monaco-வும் அதற்கு ஒப்புக்கொண்டது.
ஆனால், அமெரிக்க அணிக்காக விளையாடும் Balogun, குறைந்த சம்பளத்தை ஏற்க மறுத்து, கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பை நிராகரித்தார்.
---------
இவ்வேளையில், இந்தக் குழப்பத்தால், Manchester City-யில் இணைந்த Enzo Fernandez-க்குப் பதிலாக மற்றோர் ஆட்டக்காரரை ஒப்பந்தம் செய்ய Chelsea மேற்கொண்ட முயற்சியும் கைகூடாமல் போனது.
நிதி நிலையைச் ஈடுகட்ட, ஓர் ஆட்டக்காரரை விற்க வேண்டிய நிலையில் இருந்த Monaco, Balogun-னின் அணி மாற்றத்தில் சிக்கல் ஏற்பட்டதும், Lamine Camara-வை Chelsea-க்கு விற்க ஒப்புக்கொண்டது.
ஆனால், Balogun-னின் அணி மாற்றம் நிறைவேறும் என Monaco நம்பியதும், Camara-வை Chelsea-க்கு விற்கும் ஒப்பந்தத்தை அந்த பிரெஞ்சு அணி ரத்து செய்தது.
இறுதியில், Balogun தனது முடிவை மாற்றிக்கொண்டதால், அந்த ஒப்பந்தமும் கைகூடாமல் போனது.
--------
Joshua Zirkze-யை இரவல் அடிப்படையில் ஒப்பந்தம் செய்யக் கோரி, Everton முன்வைத்த கடைசி நேர விண்ணப்பத்தை, Manchester Untied நிராகரித்துவிட்டதாம் !
ஆட்டக்காரர்களை வாங்கும் விற்கும் தவணை முடிவடையும் நேரம் நெருங்கியிருந்த சமயத்தில், அந்தக் கோரிக்கை வந்ததே அதற்குக் காரணம்.
--------
சீன மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில், தேசிய கலப்பு இரட்டையர் Hoo Pang Ron - Lai Pei Jing, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுளனர் !
Chen Tang Jie - Cheng Su Yin தோல்வியுற்று வெளியேறினர்.