
2026 SUKMA விளையாட்டுப் போட்டியில் Pahang வீரர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து, அடுத்த SUKMA போட்டியில் அவர்களின் திறனை மேலும் மேம்படுத்த, மாநில அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது !
அதற்காக, 2026 SUKMA போட்டியில் வீரர்களின் ஒட்டுமொத்த படைப்பு குறித்து, அனைத்து விளையாட்டுச் சங்கங்களிடமிருந்தும், முழுமையான அறிக்கையை மாநில அரசு பெறவுள்ளது.
அதன் மூலம், வீரர்களின் குறைபாடுகள் மதிப்பீடு செய்து, அவர்களின் படைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
சில குறிப்பிட்ட விளையாட்டுப் பிரிவுகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், அனைத்து விளையாட்டுகளிலும் வீரர்களின் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கு, முக்கியத்துவம் அளிக்கப்படும், என்றாரவர்.
அண்மைய சிலாங்கூர் சுக்மாவில், Pahang 28 தங்கம், 19 வெள்ளி மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
---------
Manchester United-டின் முன்னாள் வீரர் Paul Scholes, Michael Carrick-க்கு பதிலாக Eddie Howe அடுத்த United தலைமை பயிற்றுநராக நியமிக்கப்படலாம் என குறிப்பிட்டுள்ளார் !
45 வயதான Carrick, இடைக்கால பயிற்றுநராக சிறப்பாகச் செயல்பட்டு, United-டை மூன்றாவது இடத்தில் முடிக்கச் செய்து, Champions League-க்கு மீண்டும் தகுதி பெறச் செய்ததைத் தொடர்ந்து, நிரந்தரப் பயிற்றுநராக நியமிக்கப்பட்டார்.
அந்தக் காலகட்டத்தில் Carrick, United-டுக்கு 12 வெற்றிகளைப் பெற்றுத் தந்தார்.
எனினும், புதிய பருவத்தின் தொடக்கம் எதிர்பார்த்தபடி அமையவில்லை.
இதனால், Carrick-ன் தலைமையில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காவிட்டால், அவருக்குப் பதிலாக Eddie Howe-வை நியமிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என Scholes சுட்டிக்காட்டினார்.
---------
Atletico Madrid வீரர் Julian Alvarez-ஐ ஒப்பந்தம் செய்ய Barcelona ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது !
முன்னதாக தனது எதிர்காலம் குறித்து வெளிப்படையாக பேசிய Alvarez, தனது கனவை நனவாக்க Atletico-வில் இருந்து வெளியேற விரும்புவதாகக் கூறினார்.