
இந்தியா, புதுடெல்லியில் நடைபெற்று வரும் BWF உலகப் பூப்பந்து போட்டியில் நாட்டின் இரு ஜோடிகளே காலிறுதி வரை சென்றுள்ளனர்!
Aaron Chia- Sooh Woi Yik சீன வீரர்களை சந்திக்கும் வேளை, மற்றொரு ஆடவர் Goh Sze Fei Nur Izzudin இரட்டையரான கொரிய வீரர்களை எதிர்கொள்கின்றனர்.
நேற்று மூன்றாம் சுற்றில் மகளிர் இரட்டையர் Pearly Tan- M Thinaah உள்ளிட்ட நாட்டின் எஞ்சிய பிரதிநிதிகள் தத்தம் எதிரணியினரிடம் வீழ்ந்தனர்.
BWF உலகப் பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை, இன்று நன்பகல் 1 மணி தொடங்கி Astro அலைவரிசை 815, 816 மற்றும் சூக்காவில் காணலாம்.
-----
உலகக் கிண்ண ஹாக்கி போட்டியின் classification playoff ஆட்டத்தில் இன்று களமிறங்கவிருக்கிறது மலேசியா!
முன்னதாக குழுவில் முதல் ஈரிடங்களைப் பிடிக்கத் தவறியதை அடுத்து, Speedy Tigers knockout சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
மலேசியா- அயர்லாந்து மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை இன்றிரவு எட்டு மணிக்கு Astro அலைவரிசை 806றில் காணலாம்.
----
அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியின் ஏற்பாட்டுக் குழு 108 மில்லியன் டாலர் பரிசுப் பணத்தை அறிவித்துள்ளது!
Grand Slam வரலாற்றில் அது மிகப் பெரிய பரிசுத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.