
Tottenham-மில் அடுத்த நிர்வாகி பொறுப்பை வகிக்க, சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன !
அதில், அவ்வணியின் நீண்ட கால வீரர் Ben Davies-சின் பெயரும் அதிலடங்கும் என, விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன.
Sean Dyche, Roberto De Zerbi ஆகியோரும், அப்பொறுப்புக்கு பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர்.
Premier லீக் புள்ளிப்பட்டியலில் 17-ஆம் இடத்தில் இருக்கும் Spurs, கையில் இன்னும் ஏழு ஆட்டங்களுடன், EPLலில் இருந்து வெளியேற்றப்படும் அபாயத்திலிருந்து, ஒரே புள்ளி கூடுதலாக வைத்துள்ளது.
-----------
Spain-நின் அடுத்த அனைத்துலக நட்புமுறை காற்பந்தாட்டத்தில், மத்தியதிடலாட்டக்காரர் Martín Zubimendi களமிறங்கமாட்டார் !
அவருக்கு அண்மைய ஆட்டத்தில் காயமடைந்ததே அதற்குக் காரணம்.
அவர் இதோடு Arsenal-லுக்கான ஆட்டங்களில் தான் பங்கேற்பாராம்.
---------
Barcelona, Robert Lewandowski-குக்கு ஓராண்டு ஒப்பந்த நீட்டிப்பை வழங்கியுள்ளது !
ஆனால் அந்த ஒப்பந்தத்தை ஏற்க வேண்டுமானால், அவர் 50 விழுக்காடு சம்பள குறைப்புக்கு உடன்பட வேண்டுமாம்.
அவ்வாறான தகவல்கள், செய்திகளில் உலா வந்துகொண்டிருக்கின்றன.