
Manchester City-யின் Bernardo Silva-வை வாங்கும் போட்டியில் சில கிளப்புகள் குதித்துள்ளன !
அவற்றில், Barcelona-வும், Juventus-சும் அடங்கும்.
சிட்டியுடனான 9 ஆண்டு கால உறவுக்குப் பிறகு, அந்த மத்தியதிடலாட்டக்காரர் இப்பருவ இறுதியில் விடைபெறுவதாக, ஓரிரு நாட்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
--------
Cristian Romero-வை ஒப்பந்தம் செய்ய வேண்டி வரும் விண்ணப்பங்கள், 50 மில்லியன் யூரோ தொகைக்கும் குறைவாக இருந்தால், அவை நிராகரிக்கப்படும் என Tottenham தெரிவித்துள்ளது !
அந்த தற்காப்பு ஆட்டக்காரர் மீது Atletico Madrid ஆர்வம் காட்டி வரும் நிலையில், Spurs அதிரடியாக அவ்வாறு கூறியது.
----------
Liverpool, Real Madrid-டின் Eduardo Camavinga-வை ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளது !
அந்த தற்காப்பு ஆட்டக்காரரை, Real, விற்கவுள்ளதாக தெரிவித்திருந்ததே அதற்குக் காரணம்.
--------
ஆசிய பூப்பந்து போட்டியில், இன்று சில மலேசிய பிரதிநிதிகள் தங்களின் பயணத்தை தொடங்குகின்றனர் !
அவர்களில், கலப்பு இரட்டையர் Chen Tang Jie - Toh Ee Wei-யும் அடங்குவர்.