Skip to main content

Advertisement

Brazil, Haiti-யை தட்டித் தூக்கியது !

 

2026 காற்பந்து திருவிழா !

இன்று காலை நடைபெற்று முடிந்த குழு நிலையிலான ஆட்டத்தில், Brazil 3-0 என Haiti-யை தோற்கடித்தது !

முற்பாதியாட்டத்தில், Brazil-லுக்காக, Manchester United வீரர் Matheus Cunha இரு கோல்கள் அடித்த வேளை, பிற்பாதியாட்டம் தொடங்கியவுடனே, Real Madrid வீரர் Vinícius Júnior மேலுமொரு கோலை போட்டு அசத்தினார்.

அமெரிக்கா 2-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, கடைசி 32 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறியுள்ளது.  

Morocco 1-0 என Scotland-ந்தை தோற்கடித்தது.

----------

Crystal Palace-சின் Adam Wharton-னை வளைத்துப்போட Tottenham, தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது !

Newcastle United வீரர் Sandro Tonali-யை, கவர்ந்து வருவதில் சிக்கல்கள் நீடிப்பதால், Spurs தற்போது Wharton மீது தனது கவனத்தை திருப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

---------

மக்காவ் பொது பூப்பந்து போட்டியில், தேசிய கலப்பு இரட்டையர் Hoo Pang Ron - Lai Pei Jing உட்பட, 5 தேசிய பிரதிநிதிகள் இன்று அரையிறுதியில் களம் காண்கின்றனர் !

அரையிறுதியாட்டத்தை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.  

----------

PSA Squash தொடர் போட்டியில், தேசிய தாரகை S.சிவசங்கரி, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் !

2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இப்போட்டியின் இறுதிச் சுற்றை எட்டிய, முதல் மலேசிய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

----------

Nations கிண்ண hockey போட்டியில், 5 முதல் 8-ஆம் இடங்களை நிர்ணயிக்கும் ஆட்டத்தில், தேசிய அணி, அமெரிக்காவை 4-2 என வீழ்த்தி  வெற்றிப் பெற்றது !

RAAGA Aaha Siranta Isai!