
2026 காற்பந்து திருவிழாவில், அதிக கோல்களுக்கு உதவிய வீரராக Brazil வீரர் Bruno Guimarães முன்னிலையில் உள்ளார் !
அவர் இதுவரை 4 கோல்களுக்கு உதவியுள்ளார்.
மொராக்கோவுக்கு எதிராக, 1 முறை கோலடிக்க உதவினார்.
ஸ்காட்லாந்துக்கு எதிராக 2 முறை கோலடிக்க உதவிய வேளை, ஜப்பானுக்கு எதிராக 1 முறை கோலடிக்க உதவினார்.
இதனிடையே, அவரை ஒப்பந்தம் செய்ய Arsenal, கடந்த வாரம் 55 மில்லியன் பவுண்ட் தொகையில் முன்வைத்த விண்ணப்பத்தை, அவர் விளையாடும் பிரிமியர் லீக் கிளப்பான Newcastle United நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
----------
இவ்வேளையில், இன்று காலையில் நடைபெற்ற கடைசி 32 அணிகளுக்கான ஆட்டத்தில், நெதர்லாந்து, 2-3 என்ற பெனால்டியில், மொரொக்கோவிடம் வீழ்ந்தது !
அதையடுத்து, நட்சத்திர வீரர்களைக் கொண்ட அவ்வணி, அப்போட்டியில் இருந்து வெளியேறியது.
----------
Nottingham Forest-டின் Elliot Anderson-னை அதிக தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்ய, Manchester City ஒப்புக்கொண்டுள்ளதாம் !
Nottingham-மில் இருந்து வெளியேறுவதாக எதிர்பார்க்கப்படும் அவருக்கு, 116 மில்லியன் பவுண்ட் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
----------
RB Leipzig-கின் திறமையான இளம் வீரர் Yan Diomande-வை ஒப்பந்தம் செய்ய, PSG, தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன !
PSG, அவருடன் தனிப்பட்ட ஒப்பந்த நிபந்தனைகளில், உடன்பாட்டை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.