FA கிண்ண காலிறுதி ஆட்டத்தில், இருந்து வெளியேறியது Arsenal !
இன்று அதிகாலை ஆட்டத்தில், அவ்வணி இரண்டாம் டிவிஷன் அணியான Southampton இடம் 1-2 என தோல்வியுற்றது.
2021-ஆம் ஆண்டிற்குப் பிறகு The Saints முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இதனிடையே, Manchester City தாக்குதல் வீரர் Erling Haaland, hattrick கோல் போட்டது, அவ்வணி Liverpool ஐ 4-0 என வீழ்த்த வகைச் செய்தது.
Chelsea, Port Vale டம் 7-0 என அபார வெற்றி கண்டு, அரையிறுதிக்கு முன்னேறியது.
--
ஸ்பெயின் லா லீகா கால்பந்தாட்டத்தில், Atletico Madrid ஐ 2-1 என வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் பார்சிலோனா ஏழு புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாம் இடத்தில் உள்ள ரியல் மாட்ரிட்,அதன் சொந்த மண்ணில் Mallorca-விடம் 2-1 என எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தது.
--
Chelsea மற்றும் பிரேசில் தேசிய அணியின் முன்னாைள் வீரர் Oscar, தனது 34 வது வயதில் தொழில்முறை கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
அவருக்கு இதய நோய் கண்டறியப்பட்டதே அதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
--
எகிப்து ஸ்குவாஷ் அனைத்துலக போட்டியிலிருந்து, தேசிய வீராங்கனை Aifa Azman இங்கிலாந்து வீராங்கனையிடம் தோல்வியுற்று வெளியேறினார்.
அனைத்து ஆகக் கடைசி விளையாட்டுச் செய்திகளையும், Stadiumastro.com-மில் இன்றே தெரிந்து கொள்ளுங்கள்.