Skip to main content

Advertisement

செய்தி | Man City-யில் இருந்து வெளியேறுகிறார் Bernado Silva !

Man City-யில் ஒன்பது ஆண்டுகளாக இருந்த Bernado Silva இப்பருவத்தோடு, கிளப்பை விட்டு வெளியேறுவார். 

அதனை சூசகமாகத் தெரிவித்துள்ளதுஅணி நிர்வாகம். 

 31 வயதான அந்த மத்திய திடல் வீரர், Pep Guardiola அணியில் ஒரு முக்கிய ஆட்டக்காரராக வலம் வந்தவர். 

ஆறு EPL வெற்றிகள், இரண்டு FA கிண்ணங்கள், 5 EFL கிண்ணங்கள், சாம்பியன்ஸ் லீக் ஆகியவற்றை வென்றுள்ளார். 

--  

உலக கிண்ண கால்பந்தாட்டத்தில் , ஈரான் விளையாடுமா என்பது குறித்து இன்னும் முடிவுச் செய்யப்படவில்லை! 

தமதணி களமிறங்கும் ஆட்டங்களை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்றுவது குறித்த கோரிக்கைக்கு, FIFA பதிலளித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

-- 

FA கிண்ண காலிறுதி ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் Leeds United, West Ham உடன்  2-2 என சமநிலையில் இருந்த வேளை, பெனால்டி ஷோட் அவுட்டில் லீட்ஸ் 4-2 என வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.   

-- 

வார இறுதியில் நடைப்பெறவிருக்கும், FA கிண்ண அரையிறுதி சுற்றுக்கான குலுக்கல் ஆட்டங்களில் லீட்ஸ் யுனைடெட் Chelseaயயும்,  Man City Southampton-யையும் எதிர்கொள்ளவுள்ளன. 

-- 

இத்தாலிய சிரி A கால்பந்தாட்டத்தில், Inter Milan ரோமாவை 5-2 என வீழ்த்தியது. 

-- 

மலேசிய கிண்ண முதல் கட்ட அரையிறுதி ஆட்டத்தில்சிலாங்கூர்,கூச்சிங் சிட்டியுடன் 1-1 என சமநிலைக் கண்டது. 

 

 

RAAGA Aaha Siranta Isai!