
சீன மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில், தேசிய கலப்பு இரட்டையர் Hoo Pang Ron - Lai Pei Jing, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர் !
காலிறுதியில் அவர்கள், தைவானிய இணையை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இதனிடையே, ஆடவர் இரட்டையர் ஜோடிகள், Tee Kai Wun - Yap Roy King, Mohd Azriyn Ayub - Tan Wee Kiong ஆகியோர், இன்று காலிறுதியில் களமிறங்குகின்றனர்.
சீன மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியை,இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.
----------
இதனிடையே, சீன Masters போட்டி, இளம் வீரர்கள், அனைத்துலக அளவில் அனுபவம் பெறுவதற்கான சிறந்த தளமாக அமைவதாக, முன்னாள் பூப்பந்து வீரர் Sairul Amar, Astro Arena-விடம் தெரிவித்துள்ளார் !
அந்த இளம் வீரர்களில், 19 வயதான Aaron Tai-யும் அடங்குவார்.
அவர், Soh Wooi Wik-குடன் இணைந்து, முந்தைய சுற்றில், உலகத் தரவரிசையில் 10-ஆவது இடத்தில் உள்ள சீன நாட்டு ஜோடியை வீழ்த்தியதை மேற்கோள்காட்டி, அவர் அவ்வாறு சொன்னார்.
----------
லண்டன் Squash Classic போட்டியின் காலிறுதிச் சுற்றில், உலகத் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் உள்ள தேசிய Squash தாரகை S.சிவசங்கரி, இன்று இந்திய வீராங்கனையைச் சந்திக்கின்றார் !