
சீன மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில், தேசிய கலப்பு இரட்டையர் Goh Soon Huat - Shevon Lai, காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர் !
அவர்கள், இரண்டாம் சுற்றில் ஜப்பானிய ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
கலப்பு இரட்டையர் Hoo Pang Ron - Lai Pei Jing-கும், காலிறுதியில் கால் பதித்தனர்.
அதே வேளை, மகளிர் இரட்டையர் Pearly Tan - M.Thinaah தோல்வியுற்று அப்போட்டியில் இருந்து வெளியேறினர்.
---------
மலேசியக் கால்பந்து சங்கத்தின் தலைவர் பதவிக்கு, MFL தலைவர் Datuk Ghani Hassan-னுக்கும், சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர், Datuk Seri Dr Shahril Mokhtar-ருக்குமிடையே நேரடிப் போட்டி நிலவுகிறது !
இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள FAM நிர்வாகக் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், அச்சங்கத்தின் கௌரவத் தலைவர், Tan Sri Hamidin Amin இடம்பெறாததைத் தொடர்ந்து, இந்நிலை ஏற்பட்டுள்ளது.
--------
இனி வரும் காலங்களில் குறைவான டென்னிஸ் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாக, Carlos Alcaraz தெரிவித்துள்ளார் !
டென்னிஸ் போட்டிகளின் கடுமையான அட்டவணை காரணமாக, வீரர்கள் காயமடையும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக Alcaraz கூறியுள்ளார்.
இதுபோன்ற அட்டவணையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது சாத்தியமற்றது என்றும், அவர் கூறினார்.
காயம் காரணமாக நான்கு மாதங்கள் போட்டிகளில் இருந்து விலகியிருந்த Alcaraz, தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளார்.
அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய பின்னர், அவர் இவ்வாறு சொன்னார்.