
சீன மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் புதிய ஜோடியாக Tee Kai Wun-Yap Roy King திகழ்கின்றனர்!
ஆடவர் இரட்டையர் பிரிவில் அவர்களுடன் Soh Wooi Yik-Aaron Tai, கலப்பு இரட்டையர் Goh Soon Huat- Shevon Laiயும், நேற்று தொடக்கச் சுற்றில் வெற்றிப் பெற்றனர்.
இதனிடையே இன்று மேலும் ஏழு தேசிய பிரதிநிதிகள் அப்போட்டியின் முதல் சுற்றில் களமிறங்குகின்றனர்.
சீன மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை இன்று காலை ஒன்பது மணி தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் சூக்காவில் காணலாம்.
-
அனைத்துலக கால்பந்தாட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ஜெர்மனிய தற்காப்பு ஆட்டக்காரர் Antonio Rudiger!
ஜெர்மனிய தேசிய அணிக்காக அவர் 12 ஆண்டுகள் விளையாடியிருக்கிறார்.
-
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான நாட்டின் பதக்க இலக்கு குறித்த அறிவிப்பை, இளைஞர் விளையாட்டு அமைச்சி அடுத்த வார வாக்கில் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.