
அடுத்த வாரம் நடைபெறும் சீனா மாஸ்டர்ஸ் போட்டியில் BAM, இரட்டையர் வீரர்களின் வெவ்வேறு ஜோடிகளை களமிறக்கி பரிசோதிக்கவுள்ளது !
ஆனால், இந்த மாற்றங்கள், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தேசிய அணித் திட்டத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என, இரட்டையர்களுக்கான பயிற்சி இயக்குநர் தெரிவித்தார்.
காரணம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடவுள்ள இரட்டையர் வீரர்களின் ஜோடிகள், ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டன.
இவ்வேளையில், Aaron Chia மற்றும் Tee Kai Wun ஜோடி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ள நிலையில், Aaron-னின் நீண்டகால இணை ஜோடி வீரரான Soh Wooi Yik அப்போட்டியில் இடம்பெறமாட்டார்.
முன்னதாக, அப்போட்டிக்கான மலேசிய அணிப் பட்டியல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டபோது, Wooi Yik-கின் பெயர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
---------
தேசிய பூப்பந்து இரட்டையர் பிரிவை மேலும் பலப்படுத்த, Teo Kok Siang மற்றும் Wong Pei Tty ஆகிய முன்னாள் வீரர்களை, BAM பயிற்றுர்களாக நியமித்துள்ளது !
Kok Siang கலப்பு இரட்டையர் வீரர்களின் பயிற்றுநராகவும், Pei Tty மகளிர் இரட்டையர் வீராங்கனைகளின் பயிற்றுநராகவும் பணியாற்றுவர்.
அவர்கள், செவ்வாய்க்கிழமை முதல் தங்களின் பணியைத் தொடங்குவர்.
---------
Crystal Palace-சுக்கு எதிரான நாளைய பிரிமியர் லீக் ஆட்டத்தில், Manchester City, தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெறும் வேட்கையோடு களமிறங்கவுள்ளது !
பருவம் தொடங்கி முதல் ஆட்டத்திலேயே, சிட்டி, 2-1 என Bournemouth-தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
Crystal Palace - Manchester City மோதும் ஆட்டத்தை, அதிகாலை 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 811 மற்றும் Sooka-வில், நேரலையாகக் காணலாம்.