
சுக்மா போட்டியில் எப்படியாவது இரண்டு தங்கப் பதக்கங்களை வெல்வதே தனது அடுத்த இலக்கு என்கிறார், மலேசிய பொது தடகளப் போட்டியில், 1,500 மீட்டர் பிரிவில் முதலிடத்தை வென்ற, பூவேன் குமார் முத்து !
சீ விளையாட்டுக்குத் தகுதி பெறுவதே தனது அடுத்த இலக்கு என, பூவேன் கூறினார்.
அதே வேளை, ஒலிம்பிக் போட்டிக்கு வாழ்க்கையில் ஒரு முறையாவது தகுதியாக வேண்டும் என ஆவல் தெரிவித்த பூவேன், அதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக சொன்னார்.
எதிர்காலத்தில், தேசிய சாதனையை முறியடிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தாம் வெற்றி பெற்றாலும், வீந்தாலும், தனக்கு அளவில்லா ஆதரவை வழங்கும் குடும்பத்தின் துணை, தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும், ஜொகூரைச் சேர்ந்த அந்த இளம் வீரர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்று UPM பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மலேசிய பொது தடகளப் போட்டியில், ஆடவருக்கான 1500 மீட்டர் பிரிவில், சிறந்த நேரத்தைப் பதிவு செய்து, வெற்றிப் பெற்றார்.
--------
இதனிடையே, அப்போட்டியில் 400 மீட்டர் பிரிவில் வெற்றிப் பெற்ற கனிஷ்கான் நாதன், மலேசியாவில் இருந்து வீரர்களை வெளிநாட்டு போட்டிகளுக்கு அனுப்பி, அவர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலான ஆதரவு வழங்கப்பட்டால் அது இன்னும் சிறப்பாக இருக்கும் எனக் கூறினார்.
அப்போது தான் மேலும் அனுபவங்களைப் பெற்று, திறமையை வளர்த்துக்கொள்ள முடியும் என கனிஷ்கான் சொன்னார்.
நேற்றைய அப்போட்டியில், பேராக்கைச் சேர்ந்த கனிஷ்கான், 48.26 வினாடிகளில் ஓட்டத்தை நிறைவு செய்து, வெற்றியாளராகத் திகழ்ந்தார்.
---------
இன்று காலை நடைபெற்ற காற்பந்து திருவிழாவின் குழு நிலையிலான ஆட்டத்தில், எகிப்து, 3-1 என நியுசிலாந்தை தோற்கடித்தது