Skip to main content

Advertisement

சுக்மா விளையாட்டுப் போட்டி திட்டமிட்டப்படி நடைப்பெறும் !

சிலாங்கூர் சுக்மா விளையாட்டுப் போட்டிசெலவினங்களைத் திட்டமிட்டு செலவுகளைக் கடுமையாகக் குறைத்து  எளிமையான முறையில் நடத்தப்படும் ! 

ஆகஸ்ட் 15 முதல் 24 வரை திட்டமிட்டபடி அப்போட்டி நடைபெறும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் Dr. Taufiq Johari, தெரிவித்துள்ளார். 

உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டால் ஏற்படக்கூடிய நிதிச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு அது முடிவானதாக அவர் கூறினார். 

மேலும், போட்டிகளை ஏற்று நடத்தும் சிலாங்கூரின் நுணுக்கமான தயாரிப்புகளையும், விளையாட்டு வீரர்களின் தயார்நிலைகளையும் பாராட்டும் விதமாக அது அமையும் என அமைச்சர் விளக்கினார். 

-- 

ஆசிய Championship பூப்பந்து போட்டியில்கலப்பு இரட்டையர் Chen Tang Jie - Toh Ee Wei காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். 

இதனிடையேதேசிய ஆடவர் இரட்டையர் Aaron Chia-Soh Wooi Yik உட்பட, மேலும் 3 தேசியப் பிரதிநிதிகள் இன்று இரண்டாவது சுற்றில் களமிறங்குகின்றனர். 

-- 

யூரோப்பா லீக்கின் முதல் கட்ட காலிறுதி ஆட்டத்தில், நாளை அதிகாலை Aston Villa-வும் Bologna-வும் சந்திக்கின்றன! 

அவ்வாட்டத்தில், அணி வீரர்கள் கொஞ்சம் கூட அசராது, முழு கவனத்தோடு களமிறங்க வேண்டும் என Villa நிர்வாகி Unai Emery தமதணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Aston Villa Bologna மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிப்பரப்பை அதிகாலை மணி 3 தொடங்கி Astroஅலைவரிசை 820 மற்றும் சூக்காவில் காணலாம். 

-- 

 

Stadiumastro விளையாட்டுத் தகவல் மையம்அண்மைய விளையாட்டுச் செய்திகளுக்கு Stadiumastro.comமை வலம்  வாருங்கள். 

 

RAAGA Aaha Siranta Isai!