Skip to main content

Advertisement

Champions லீக்கில் Arsenal வெல்ல வாய்ப்புண்டு !

 

PSG-யுடனான Champions லீக் இறுதியாட்டத்தில், Arsenal வெல்ல அதிக வாய்ப்புண்டு !

அதனிடம் இருக்கும் பலமான தற்காப்பு அரணே அதற்குக் காரணம் என, அதன் 20 ஆண்டுகால தீவிர ரசிகர், ஹரிஹரன்ராஜா KR நாகலிங்கம் கூறுகிறார்.

பிரிமியர் லீக் வெற்றியைக் கொண்டாடுவதை சற்று குறைத்துக்கொண்டு, Champions லீக் இறுதியாட்டத்தில் கவனம் செலுத்தினால், வெற்றி வாய்ப்பு அதிகம் என அவர் சொன்னார்.

இதுவரை ஒரு முறை கூட Champions League கிண்ணத்தை வெல்லாத Arsenal, வரும் ஞாயிற்றுக்கிழமை நடப்பு வெற்றியாளரான பலம் பொருந்திய  PSG-யை வீழ்த்த கங்கணம் கட்டியுள்ளது.

-------------

Gabriel Jesus-சை நாடி வரும் கிளப்புக்கு, 20 மில்லியன் பவுண்ட் விலையில் அவரை விற்க, Arsenal முன் வருகின்றதாம் !

அந்த தாக்குதல் ஆட்டக்காரர், The Gunners-சில் ஆட்ட வாய்ப்புக்காக போராடி வருவதே அதற்குக் காரணம்.

Gunners-சுடான அவரது ஒப்பந்தம் முடிய இன்னும் ஓராண்டு காலம் உள்ளது.

---------

Liverpool-லின் Andrew Robertson-னை வளைத்துப்போட, Tottenham வாய்மொழி ஒப்பந்தம் செய்துள்ளதாக, விளையாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன !

The Reds-சுடனான அவரது ஒப்பந்தம் இப்பருவத்தோடு நிறைவடையவுள்ள நிலையில், அதன் பின்னர் Spurs அவரை ஒப்பந்தம் செய்யத் திட்டமிட்டுள்ளதாம்.

-----------

சிங்கப்பூர் பொது பூப்பந்து போட்டியில், தேசிய ஆடவர் இரட்டையர் Goh Sze Fei - Nur Izzudin, காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர் !

அவர்கள் இரண்டாவது சுற்றில், சகநாட்டு இணையான Arif Junaidi - Yap Roy King-கை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இதனிடையே, மகளிர் இரட்டையர் Pearly Tan - M.தீனா, இராண்டாம் சுற்றோடு தங்களின் பயணத்தை முடித்துக்கொண்டனர்.

சிங்கப்பூர் பொது பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815-திலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம். 

RAAGA Aaha Siranta Isai!